ஆபாசப் பட வழக்கு: கைதாவதிலிருந்து தப்பிக்க ரூ.25 லட்சம் லஞ்சம் கொடுத்த ஷில்பா ஷெட்டியின் கணவர்

Raj-2021-07-23

Source: provided

மும்பை: பெண்களை ஏமாற்றி ஆபாசப் படங்கள் எடுத்த நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா தான் கைது செய்யப்படாமல் இருப்பதைத் தவிர்க்க மும்பை போலீஸாருக்கு ரூ.25 லட்சம் வரை லஞ்சம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக மும்பை ஊழல் தடுப்பு போலீஸாருக்கு 4 மின்னஞ்சல்கள் வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

வெப் சீரிஸ் எடுக்கிறேன் என்ற போர்வையில் பெண்களை ஏமாற்றி ஆபாசப் படங்கள் எடுத்ததாகவும், இதற்காகத் தனியாக செல்போன் செயலி தயாரித்துப் பதிவேற்றம் செய்ததாகவும் எழுந்த புகாரின் அடிப்படையில், பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா உள்ளிட்ட 11 பேரைக் கடந்த திங்கள்கிழமை இரவு மும்பை போலீஸார் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ராஜ் குந்த்ராவை 27-ம் தேதிவரை போலீஸார் காவலில் விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்துள்ளார். ராஜ் குந்த்ரா மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே ஆபாசப் படங்கள் எடுத்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் போலீஸார் தன்னைக் கைது செய்வதிலிருந்து தப்பிக்க ரூ.25 லட்சம் வரை ராஜ் குந்த்ரா லஞ்சம் கொடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.  இதுகுறித்து மும்பை ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கூறுகையில், யாஷ் தாக்கூர் என்பவரிடம் இருந்து 4 மின்னஞ்சல்கள் எங்களுக்கு வந்துள்ளன. அதில் ராஜ் குந்த்ரா எப்போதெல்லாம் போலீஸாருக்கு லஞ்சமாகப் பணம் கொடுத்துள்ளார் என்ற தகவல் உள்ளது.  தன்னை போலீஸார் கைது செய்யாமல் இருக்க ஏறக்குறைய ரூ.25 லட்சம்வரை ராஜ் குந்த்ரா லஞ்சம் கொடுத்துள்ளார். இந்த மின்னஞ்சல்கள் அனைத்தும் வழக்கை விசாரித்து வரும் மும்பை போலீஸாருக்கு மாற்றப்பட்டுள்ளது. மின்னஞ்சலின் உண்மைத் தன்மை குறித்தும் விசாரித்து வருகிறோம் எனத் தெரிவித்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து