கெலவரப்பள்ளி நீர்த்தேக்கத்தில் இருந்து நாளை முதல் தண்ணீர் திறக்க உத்தரவு

Kelavarapalli 2021 07 27

Source: provided

சென்னை : கெலவரப்பள்ளி நீர்த்தேக்கத்தில் இருந்து நாளை முதல் தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. 

இது குறித்து அரசு கூடுதல் தலைமை செயலாளர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், 

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வட்டம், கெலவரப்பள்ளி நீர்த்தேக்கத்திலிருந்து வலது மற்றும் இடதுபுறப் பிரதானக் கால்வாய்களில் முதல் போக பாசனத்திற்குச் சுழற்சி முறையில் நனைப்பு  ஒன்றுக்கு 76.23 மில்லியன் கன அடி வீதம் 9 நனைப்புகளுக்கு மொத்தம் 686.07 மி.க.அடிக்கு மிகாமல்  29.07.2021 முதல் 10.12.2021 வரை 135 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது.

இதனால் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர்   வட்டத்தில் சுமார் 8000 ஏக்கர் பாசனப் பரப்பு பயன்பெறும்.  இவ்வாறு அரசு கூடுதல் தலைமை செயலாளர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து