இந்தியாவில் 41,649 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

India-Corona 2021 07 31

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 41,649 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன.

நாட்டில் கொரோனா 2-வது அலையின் தீவிர பாதிப்புகள் குறைந்து உள்ளன.  இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 41,649 பேருக்கு (நேற்று முன்தினம் 44,230) கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன.  இது நேற்று முன்தினம் 44,230 ஆக இருந்தது.  இதனால் கடந்த 2 நாட்களை விட பாதிப்பு எண்ணிக்கை குறைந்து உள்ளது.  கடந்த 24 மணி நேரத்தில் 37,291 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இது நேற்று முன்தின எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது (42,360 பேர்) குறைவாகும். நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 கோடியே 16 லட்சத்து 13 ஆயிரத்து 993 ஆக உள்ளது.  இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 7 லட்சத்து 81 ஆயிரத்து 263 ஆக உயர்ந்து உள்ளது.  கொரோனா பாதிப்புகளுக்கு 4 லட்சத்து 8 ஆயிரத்து 920 பேர் நாடு முழுவதும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  கடந்த 24 மணி நேரத்தில் 593 பேர் உயிரிழந்து உள்ளனர்.  இதனால், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 4,23,810 ஆக உயர்ந்து உள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து