எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் மற்றும் ஒரு லட்சம் தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் ஆகிய திட்டங்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியில் தொடங்கி வைத்தார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஊராட்சி ஒன்றியம், சாமனப்பள்ளி கிராமத்தில், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். பொதுமக்களின் வீட்டிற்கே நேரடியாகச் சென்று தொற்றா நோய்களுக்கான பரிசோதனைகளைச் செய்தல், தேவைப்படும் மருந்துகளை வழங்குதல், இயன்முறைச் சிகிச்சை, இயலா நோயாளிகளுக்கு வழங்கக்கூடிய வலி நிவாரணம், ஆதரவு சிகிச்சை ஆகியவற்றை உள்ளடக்கிய மருத்துவச் சேவைகள் அளிக்கப்படும்.
இத்திட்டத்தின் கீழ், மாநிலத்தில் தொற்றா நோய்களின் சுமையை எதிர்கொள்ளும் விதமாக நோயாளிகளின் இல்லங்களுக்கே சென்று சில அத்தியாவசியமான சுகாதாரச் சேவைகள் வழங்கப்பட வேண்டும் என்ற முதல்வரின் நோக்கத்தினைச் செயல்படுத்தும் வகையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மூலம் மக்களைத் தேடி மருத்துவம் என்ற புதிய திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தினைத் தொடங்கி வைத்து, தமிழக முதல்வர், இரண்டு பயனாளிகளின் இல்லங்களுக்கு நேரில் சென்று, மருத்துவச் சேவை அளிப்பதைப் பார்வையிட்டு அவர்களுக்கு மருந்துகளை வழங்கினார். மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம், பரிசோதனை செய்து பட்டியலிடப்பட்ட நோயாளிகளில் 45 வயதும் அதற்கு மேற்பட்டவர்கள் மற்றும் இயலாமையில் உள்ள நபர்களுக்கு உயர் இரத்த அழுத்தம் / நீரிழிவு நோய்க்கான மருந்துகளைக் களப்பணியாளர்கள் இல்லங்களுக்கே சென்று வழங்குதல், நோய் ஆதரவு சேவைகள், இயன்முறை மருத்துவச் சேவைகள், சிறுநீரக நோயாளிகளைப் பராமரித்தல், அத்தியாவசிய மருத்துவச் சேவைகளுக்கான பரிந்துரை, குழந்தைகளின் பிறவிக் குறைபாடுகளைக் கண்டறிந்து தெரிவித்தல் போன்ற ஒரு குடும்பத்திற்குத் தேவையான அனைத்து சுகாதாரத் தேவைகளையும் வழங்குவதுடன் தொடர்ந்து கண்காணிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், சமுதாயநலப் பதிவேட்டில் ஒவ்வொரு நோயாளியையும் பதிவு செய்து தொடர்ந்து கண்காணித்து வகைப்படுத்துவது இத்திட்டத்தின் மற்றொரு முக்கிய அம்சமாகும்.
இத்திட்டத்தில் தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனத்தின் பயிற்சி பெற்ற பெண் சுகாதாரத் தன்னார்வலர்கள், இடைநிலைச் சுகாதாரச் சேவையாளர்கள், இயன்முறை மருத்துவர்கள், நோய் ஆதரவுச் செவிலியர் ஆகியோர் பங்கு பெறுவர். பொது சுகாதார துறையின் களப்பணியாளர்கள் இக்குழுவினரின் செயல்பாடுகளைக் கண்காணித்து வழிநடத்துவார்கள். ஒவ்வொரு வட்டாரத்திலும் இத்திட்டத்திற்கென சிறப்பாக வடிவமைக்கப்பட்ட வாகனங்கள் பயனாளிகளின் சேவைக்காக ஈடுபடுத்தப்படும்.
இத்திட்டத்தின் முதற்கட்ட இலக்கான 30 லட்சம் குடும்பங்களை சேர்ந்த சுமார் ஒரு கோடி மக்கள் பயன்பெறுவதன் மூலம், ஆண்டு இறுதியில் மாநில அளவில் அனைவருக்கும் நலவாழ்வு என்ற உயரிய இலக்கை அடைய இந்தத் திட்டம் வழிவகுக்கும். இத்திட்டம் சூளகிரியில் தொடங்கி வைக்கப்பட்ட அதே நேரத்தில் மதுரை, கோயம்புத்தூர், சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி மற்றும் சென்னை ஆகிய 7 மாவட்டங்களிலும் காணொலிக்காட்சி வாயிலாக முதல்வர் தொடங்கி வைத்தார்.
மேலும், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் சிகிச்சை வழங்கவிருக்கும் செவிலியர் மற்றும் இயன்முறைச் சிகிச்சையாளர்களின் பயன்பாட்டிற்காக 3 புதிய வாகனங்களின் சேவைகளை முதல்வர் நேற்று கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து, தமிழக முதல்வர், கால்களை இழந்த 2 நபர்களுக்கு 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான செயற்கைக் கால்கள், சிறுநீரகங்கள் செயலிழந்த ஒரு நபருக்கு வயிற்றினுள் டயாலிசிஸ் செய்யப்படும் முறைக்கான மருத்துவ உபகரணங்கள், கெலமங்கலம் ஊராட்சி ஒன்றியம், உனிசெட்டி ஆரம்பச் சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட பெட்டமுகுளாலம் பகுதி மலைவாழ் மக்கள் பயனடையும் வகையில் ஒரு 108 அவசரகால ஆம்புலன்ஸ் ஊர்தி ஆகியவற்றை வழங்கியதோடு, கர்ப்பிணித் தாய்மார்க்கு மஞ்சள் காமாலை நோய்க்கான விரைவுப் பரிசோதனைத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
இவ்விழாவில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கேட்டர்பில்லர் நிறுவனம், டாடா நிறுவனம், ஓலா நிறுவனம், பைவிலி நிறுவனம், மிண்டா நிறுவனம், லுமினியஸ் பவர் டெக்னாலஜிஸ் நிறுவனம், டி.வி.எஸ். நிறுவனம், செய்யார் சீஸ் நிறுவனம், மைலான் நிறுவனம், எக்சைடு நிறுவனம், பஸ்ட் ஸ்டெப் பேபிவியர் நிறுவனம், நீல்கமல் நிறுவனம் மற்றும் செப்லர் ஆகிய நிறுவனங்களில் பணிபுரியும் ஒரு லட்சம் தொழிலாளர்களுக்குப் பெரு நிறுவனங்களின் சமூகப் பொறுப்புணர்வு நிதியின் கீழ் தனியார் மருத்துவமனைகள் மூலம் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியினை முதல்வர் நேற்று தொடங்கி வைத்தார்.
இவ்விழாவில், அமைச்சர்கள் ஆர்.காந்தி, மா.சுப்பிரமணியன், சட்டமன்ற உறுப்பினர்கள் பிரகாஷ், மதியழகன் மற்றும் ராமச்சந்திரன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் மரு.ஜெ. ராதாகிருஷ்ணன், தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் மரு. தாரேஸ் அகமது, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் வி.ஜெயசந்திர பானுரெட்டி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
சுமார் 400 இண்டிகோ விமானங்களின் சேவை தொடர்ந்து 4-வது நாளாக ரத்து: பயணிகள் கடும் அவதி
05 Dec 2025மும்பை, இண்டிகோ விமானம் 4-வது நாளாக ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து பயணிகள் கடும் அவதியடைந்தனர்.
-
மாமதுரைக்கு தேவை வளர்ச்சியா, அரசியலா? முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி
05 Dec 2025சென்னை, மதுரைக்கு தேவை வளர்ச்சியா, அரசியலா? என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
-
த.வெ.க.வில் இணைந்தது ஏன்...? - நாஞ்சில் சம்பத் பரபரப்பு பேட்டி
05 Dec 2025சென்னை : விஜய் கட்சியில் இணைந்தது குறித்து நாஞ்சில் சம்பத் விளக்கம் அளித்துள்ளார்.
-
குற்றாலம் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை
05 Dec 2025தென்காசி : குற்றாலம் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுககு திடீர் தடை விதிக்கப்பட்டது.
-
குடியரசுத் தலைவர் மாளிகையில் ரஷ்ய அதிபருக்கு ராணுவ அணிவகுப்புடன் வரவேற்பு
05 Dec 2025டெல்லி, புதினுக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் ராணுவ அணிவகுப்புடன் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 05-12-2025.
05 Dec 2025 -
சென்னையில் இன்று வழக்கம்போல் பள்ளிகள் செயல்படும்: கல்வி அலுவலர்
05 Dec 2025சென்னை : சென்னையில் இன்று முதல் பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும் என்று முதன்மை கல்வி அலுவலர் கூறினார்.
-
பயங்கரவாதத்தை எதிர்க்க உலகளாவிய ஒற்றுமை தேவை : பிரதமர் மோடி வலியுறுத்தல்
05 Dec 2025புதுடெல்லி : பயங்கரவாதத்தை எதிர்க்க உலகளாவிய ஒற்றுமை தேவை என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
திருப்பரங்குன்றம் விவகாரம்: தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு மீது விரைவில் விசாரணை : சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி அறிவிப்பு
05 Dec 2025புதுடெல்லி : திருப்பரங்குன்றம் விவகாரத்தில் விரைவில் விசாரணைக்கு பட்டியலிடப்படும் என்று சுப்ரீம்கோர்ட் தலைமை நீதிபதி அறிவித்துள்ளார்.
-
ஐ.சி.சி.-ன் நவம்பர் மாத சிறந்த வீராங்கனை விருது பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றார் ஷபாலி
05 Dec 2025துபாய் : ஐ.சி.சி.-ன் நவம்பர் மாத சிறந்த வீராங்கனை விருது பரிந்துரை பட்டியலில் இந்தியாவின் ஷபாலி வர்மா இடம்பெற்றார்.
-
மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே சிறப்பு மலை ரயில் மீண்டும் இயக்கம்
05 Dec 2025ஊட்டி, மேட்டுப்பாளையம் - ஊட்டி இடையே சிறப்பு மலை ரயில் மீண்டும் இயக்கப்படுகிறது.
-
திருவண்ணாமலையில் தி.மு.க. இளைஞரணி மண்டல கூட்டம்: துணை முதல்வர் உதயநிதி திடீர் ஆய்வு
05 Dec 2025திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் தி.மு.க. இளைஞரணி மண்டல கூட்டம் நடைபெறுவதை முன்னிட்டு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.
-
அதிபர் ட்ரம்ப் முன்னிலையில் காங்கோ, ருவாண்டா இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்து
05 Dec 2025வாஷிங்டன், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் முன்னிலையில் காங்கோ, ருவாண்டா இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.
-
மதக்கலவரத்தை உருவாக்குவதே பா.ஜ.க.வின் நோக்கம்: கனிமொழி
05 Dec 2025புதுடெல்லி : மதக்கலவரத்தை உருவாக்குவதே பா.ஜ.க.வின் நோக்கம் என்று கனிமொழி எம்.பி. குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
கடந்த 2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 சரிவு
05 Dec 2025சென்னை : சென்னையில் நேற்று (டிச.,05) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து, ஒரு சவரன் ரூ.96 ஆயிரத்திற்கு விற்பனையானது. கிராமுக்கு ரூ.20 குறைந்து
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 05-12-2025.
05 Dec 2025 -
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3.79 கோடி
05 Dec 2025திருமலை, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒருநாள் உண்டியல் காணிக்கையாக ரூ.3 கோடியே 79 லட்சம் கிடைத்தது.
-
தீபத்திருவிழா: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நெய் தீபங்கள் ஏற்றி வழிபாடு
05 Dec 2025திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தீபத்திருவிழாவை முன்னிட்டு நெய் தீபங்கள் ஏற்றி வழிபாடு நடந்தது.
-
பிரதமர் மோடி- அதிபர் புடின் முன்னிலையில் சுகாதாரம், பாதுகாப்பு உள்பட பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து
05 Dec 2025புதுடெல்லி : டெல்லியில் ரஷ்ய அதிபர் புடின் உடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.
-
தமிழ்நாடு முழுவதும் பறிமுதல் செய்த வாகனங்கள் பொது ஏலம் விடப்படும்: தமிழக காவல்துறை தகவல்
05 Dec 2025சென்னை, தமிழ முழுவதும் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பொது ஏலம் விடப்படும் என்று தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.
-
ஷமி குறித்து ஹர்பஜன் கேள்வி
05 Dec 2025முகமது ஷமி எங்கே? அவர் ஏன் விளையாடவில்லை? என்று இந்திய முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.
-
திருப்பரங்குன்றம் விவகாரம்: நயினார் உள்பட 113 பேர் மீது 7 பிரிவுகளில் போலீசார் வழக்கு
05 Dec 2025மதுரை, மதுரை திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது தொடர்பாக நியினார் நாகேந்திரன் உள்பட 113 பேர் மீது 7 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
-
தமிழகத்தில் 6 நாட்களுக்கு மிதமான மழை தொடரும் : வானிலை ஆய்வு மையம் தகவல்
05 Dec 2025சென்னை : தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு மிதமான மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
-
2-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி: ஆஸ்திரேலியா நிதான ஆட்டம்
05 Dec 2025பிரிஸ்பேன் : பிரிஸ்பேனில் தொடங்கிய 2-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி நிதானமாக ஆடி வருகிறது.
-
ஐ.பி.எல். மினி ஏலத்தில் சி.எஸ்.கே. 2 வீரர்களை தேர்ந்தெடுக்க வாய்ப்பு: அஸ்வின் கணிப்பு
05 Dec 2025சென்னை : ஐ.பி.எல். மினி ஏலத்தில் உமேஷ் யாதவ் - ஆகியுப் நபியை சி.எஸ்.கே. தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளதாக அஸ்வின் கணித்துள்ளார்.


