முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவில்களில் மொட்டை போடும் ஊழியர்களுக்கு மாதம் ரூ.5,000 ஊக்கத்தொகை : அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 7 செப்டம்பர் 2021      ஆன்மிகம்
Image Unavailable

Source: provided

சென்னை : கோவில்களில் மொட்டை அடிக்க கட்டணம் ரத்து செய்யப்பட்டு இருப்பதால் அந்த பணியாளர்களுக்கு மாதம் தோறும் ஐந்தாயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய அமைச்சர் சேகர் பாபு, இனி தமிழகத்தில் உள்ள கோவில்களில் மொட்டை அடிக்க கட்டணம் வசூலிக்கப்படாது என்று அறிவித்தார். அந்த ஊழியர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சம்பளம் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். அதன் படி, மொட்டை அடிப்பதற்கு கட்டணம் இல்லை என்ற திட்டம் அனைத்து கோவில்களிலும் அமலுக்கு வந்துள்ளது.

இந்த நிலையில், முடி காணிக்கை செலுத்துவதற்கான கட்டணம் ரத்து செய்யப்பட்டு இருப்பதால் அதை நம்பியிருந்த பணியாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருப்பதாக நேற்று சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

அதற்கு பதிலளித்த அமைச்சர் சேகர் பாபு, மொட்டைக்கு கட்டணம் இல்லை என்ற திட்டம் அறிவிக்கப்பட்டதால் பக்தர்கள் உள்ளம் நெகிழ்ந்திருப்பதாகவும் அந்தப் பணியில் ஈடுபட்டுள்ள 1,749 பணியாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு மாதந்தோறும் 5 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து