முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 88 குறைந்தது

சனிக்கிழமை, 11 செப்டம்பர் 2021      வர்த்தகம்
Image Unavailable

தங்கம் விலை நேற்று பவுனுக்கு ரூ.88 குறைந்து ரூ.35 ஆயிரத்து 520-க்கு விற்பனை செய்யப்பட்டது.

 

தங்கம் விலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஏற்றத்தாழ்வுகள் காணப்பட்டது. இதனால் தங்கம் பவுன் மீண்டும் ரூ.36 ஆயிரத்துக்கு கீழ் வந்தது.  இதற்கிடையே கடந்த 4-ம் தேதி தங்கம் பவுன் ரூ.36 ஆயிரத்தை நெருங்கியது. அன்று ஒரு பவுன் ரூ.35 ஆயிரத்து 968-க்கு விற்பனையானது.  ஆனால் அதன்பின் விலை குறைந்தது. கடந்த 6-ம்  தேதி முதல் குறைவு காணப்பட்டது. தொடர்ந்து மூன்று நாட்கள் விலை குறைந்தபடி இருந்தது. ஆனால் நேற்று முன்தினம் தங்கம் பவுனுக்கு ரூ.144 உயர்ந்து ரூ.35 ஆயிரத்து 608-க்கு விற்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று தங்கம் விலை குறைந்தது. சென்னையில் நேற்று காலை தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.88 குறைந்து ரூ.35 ஆயிரத்து 520-க்கு விற்பனையானது. ஒரு கிராம் ரூ.4,440ஆக இருந்தது.   தங்கத்தை போலவே வெள்ளி விலையும் குறைந்தது. வெள்ளி கிலோவுக்கு ரூ.500 குறைந்து ரூ.68 ஆயிரமாக இருந்தது. ஒரு கிராம் வெள்ளி ரூ.68 ஆக உள்ளது.   தங்கம் விலை சில நாட்களாக குறைந்து வருவது நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்கு ஆறுதல் அளிப்பதாக உள்ளது. தொடர்ந்து விலை குறைந்து பவுன் ரூ.35 ஆயிரத்துக்கு கீழ் செல்லுமா என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே நிலவி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து