முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் பவித்ரோற்சவ விழா : வரும் 18-ம் தேதி முதல் துவங்குகிறது

புதன்கிழமை, 15 செப்டம்பர் 2021      ஆன்மிகம்
Image Unavailable

Source: provided

ஐதராபாத் : திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருகிற 18-ம்  தேதி முதல் 20-ம் தேதி வரை பவித்ரோற்சவ விழா 3 நாட்கள் நடக்கிறது. இதனை முன்னிட்டு நேற்று முன்தினம் கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடந்தது.

முன்னதாக நாளை 17-ம் தேதி அங்குரார்ப்பணம் நடக்கிறது. பவித்ரோற்சவத்தின் முதல்நாளான 18-ம் தேதி பவித்ரா பிரதிஷ்டை நடக்கிறது. 19-ம் தேதி பவித்ரா சமர்ப்பணமும், 20-ம் தேதி மகா பூர்ணாஹூதியும், அன்றைய தினம் மாலை 3 மணி முதல் 5 மணி வரை கோவில் வளாகத்தில் ஸ்நபன திருமஞ்சனம் மற்றும் சக்கரஸ்ஞானம் நடைபெறுகிறது.  கடைசி நாளில், மாலை 3 மணி முதல் 5 மணி வரை, கோவில் வளாகத்தில் ஸ்நபநத்திருமஞ்சனம் மற்றும் சக்கரஸ்நானம் நடைபெறும்.

இதனை முன்னிட்டு நேற்று முன்தினம் கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம் நடந்தது. காலை 7.30 மணி முதல் 9.30 மணி வரை கோவில் வளாகங்கள், சுவர், கூரை, பூஜை பொருட்கள் அனைத்தும் தண்ணீரால் சுத்தம் செய்யப்பட்டது.  தொடர்ந்து கோவில் முழுவதும் சூர்ணம், சுகந்த திரவிய பொருட்கள் கலந்த புனித நீர் தெளிக்கப்பட்டது.

இதன் காரணமாக, கல்யாண உற்சவம் மற்றும் ஊஞ்சல் சேவை ரத்து செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கோவில் துணை அதிகாரி கஸ்துரிபாய், உதவி அதிகாரி பிரபாகரரெட்டி, அர்ச்சகர்கள் மற்றும் பிற அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து