முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என்று தனியார் பள்ளிகள் கட்டாயப்படுத்தக்கூடாது: அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை

வெள்ளிக்கிழமை, 17 செப்டம்பர் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : மாணவர்கள் கண்டிப்பாக பள்ளிக்கு வர வேண்டும் என எந்த தனியார் பள்ளியும் கட்டாயப்படுத்தக்கூடாது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.

சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர், ஆசிரியர்களை வேலையில் இருந்து நீக்க வேண்டாம் என தனியார் பள்ளிகளை கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், இணையத்தில் பதிவிறக்கம் செய்யப்படும் 12-ஆம் வகுப்பு சான்றிதழில் அரசின் அங்கீகார சீல் இல்லாதது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை ஆணையருடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். அரசின் அங்கீகார சீல் இல்லாததால் வேறு மாநிலங்களில் தமிழக மாணவர்கள் சேருவதில் சிக்கல் என தகவல் வெளியானதை தொடர்ந்து, அமைச்சர் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

மாணவர்கள் கண்டிப்பாக பள்ளிக்கு வர வேண்டும் என எந்த தனியார் பள்ளியும் கட்டாயப்படுத்தக்கூடாது என்றும் குறிப்பிட்டார். மாஸ்க் அணியாமல் வரும் மாணவர்களுக்கு பள்ளியிலேயே அதனை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார். ஆசிரியர்களை வேலையில் இருந்து நீக்க வேண்டாம் என தனியார் பள்ளிகளை கேட்டுக்கொள்கிறேன் என்றும் அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து