முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா நிவாரண நிதியை மாநில அரசே வழங்க அறிவுறுத்திய மத்திய அரசுக்கு 'கேரளா' எதிர்ப்பு

செவ்வாய்க்கிழமை, 28 செப்டம்பர் 2021      இந்தியா
Image Unavailable

கொரோனா நிவாரண நிதி மாநில அரசுகளின் பணத்தில் இருந்து வழங்க வேண்டும் என்பதற்கு கேரளா உள்ளிட்ட சில மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த பணத்தை மத்திய அரசே வழங்க வேண்டும் என்று அந்த மாநிலங்கள் வற்புறுத்தி இருக்கின்றன.

இந்தியாவில் இதுவரை கொரோனாவுக்கு 4 லட்சத்து 47 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். கொரோனாவால் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இதை விசாரித்த நீதிபதிகள், மத்திய அரசு நிதி உதவி வழங்குவதற்கான அறிவிப்பை வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதில் மத்திய அரசு தயக்கம் காட்டியதை அடுத்து சுப்ரீம் கோர்ட்டு ஒரு உத்தரவு பிறப்பித்தது.

அதில், கொரோனாவால் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. இதையடுத்து இந்த பணத்தை மாநில அரசுகள் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து வழங்க செய்வது என்று முடிவு எடுக்கப்பட்டது. இதன்படி மத்திய அரசு உள்துறையின் துணைச் செயலாளர் ஆசீஷ்குமார் சிங் அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், அனைத்து மாநில அரசுகளும் தங்கள் மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து கொரோனாவில் உயிரிழந்த குடும்பங்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிதி உதவி வழங்க வேண்டும்.

தொற்று பாதிப்பு தொடங்கிய காலத்தில் இருந்து இறந்தவர்கள் அனைவரின் குடும்பங்களுக்கும் நிவாரணம் வழங்கப்பட வேண்டும். அடுத்த உத்தரவு வரும் வரை இந்த உதவித்தொகை அளிக்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

 

கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனாவை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவித்தது. எனவே அதிலிருந்து இறந்தவர்கள் அனைவருக்கும் நிதி உதவி கிடைக்கும். ஆனால் கொரோனா நிவாரண நிதி மாநில அரசுகளின் பணத்தில் இருந்து வழங்க வேண்டும் என்பதற்கு கேரளா உள்ளிட்ட சில மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த பணத்தை மத்திய அரசே வழங்க வேண்டும் என்று அந்த மாநிலங்கள் வற்புறுத்தி இருக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து