முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போதைமருந்து விவகாரத்தில் சிறையில் இருக்கும் மகனை சந்தித்தார் நடிகர் ஷாருக்கான்

வியாழக்கிழமை, 21 அக்டோபர் 2021      சினிமா
Image Unavailable

சொகுசுக் கப்பலில் நடந்த விருந்தில் தடை செய்யப்பட்ட போதை மருந்து பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டு மும்பை ஆர்தர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆர்யன் கானை அவரின் தந்தை ஷா ருக் கான் நேற்று முதல்முறையாகச் சிறைக்குச் சென்று சந்தித்தார்.

மும்பை கடற்பகுதியில் சொகுசுக் கப்பலில் நடைபெற்றகேளிக்கை விருந்தில் தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்கள் பயன்படுத்தப்படுவதாக என்சிபிஅமைப்புக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் கடந்த 3-ம் தேதி அந்தக் கப்பலில் என்சிபி அதிகாரிகள் நடத்திய சோதனையில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கானும் ஒருவர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், 20 பேரை என்சிபி அதிகாரிகள் கைது செய்துள்ளனர். ஆர்யன் கான் தற்போது மும்பை ஆர்தூர் சாலை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி ஆர்யன் கான் உள்ளிட்டோர் மும்பையில் உள்ள போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. 

இதையடுத்து, மும்பை ஆர்தர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது மகன் ஆர்யன் கானை முதல்முறையாக அவரின் தந்தை ஷாருக் கான் நேற்று நேரடியாகச் சந்தித்துப் பேசினார். மும்பை ஆர்தர் சிறைக்கு நேற்று காலை 9 மணிக்கு பலத்த பாதுகாப்புடன் வந்த நடிகர் ஷாருக்கான், 9.35 மணிக்கு சிறையிலிருந்து வெளியேறினார். ஏறக்குறைய 10 நிமிடங்கள் தனது மகன் ஆர்யன் கானுடன் ஷாருக் கான் பேசியதாகச் சிறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

ஷாருக்கான் மும்பை ஆர்தர் சிறைக்கு ஷாருக் கான் வருகை அறிந்ததும் ஏராளமான ஊடகத்தினர் குவிந்துவிட்டனர். இதனால் பெரும்பரபரப்பு ஏற்பட்டதையடுத்து, கூடுதல் போலீஸார்பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இதற்கு முன் சிறையில் உள்ள கைதிகளை அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் சந்திக்க அனுமதியில்லை. ஆனால் நேற்று காலை முதல் சந்திக்க அனுமதியளிக்கப்பட்ட நிலையில் ஷாருக்கான் தனது மகனைச் சந்தித்து சென்றது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து