முக்கிய செய்திகள்

சர்வதேச பருவநிலை மாற்றம் மாநாடு: அக்.31-ம் தேதி ஸ்காட்லாந்து செல்கிறார் பிரதமர் மோடி

modi-2021-09-04

Source: provided

புதுடெல்லி : ஸ்காட்லாந்து, கிளாஸ்கோ நகரில் அடுத்த மாதம் முதல் வாரத்தில் நடக்கும் சர்வதேச பருவநிலை மாற்றம் மாநாட்டில் பங்கேற்க வரும் 31-ம் தேதி பிரதமர் மோடி ஸ்காட்லாந்து செல்கிறார்.

இங்கிலாந்து கட்டுப்பாட்டில் உள்ள ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் சர்வதேச பருவநிலை மாற்றம் மாநாடு அடுத்த மாதம் முதல் வாரத்தில் நடைபெறுகிறது. இதில் உலகம் முழுவதும் இருந்து 120 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். இந்தியா சார்பில் பிரதமர் மோடி இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளார்.  இதற்காக அவர் வரும் 31-ம் தேதி கிளாஸ்கோ நகருக்கு செல்கிறார்.  இது சம்பந்தமான தகவல்கள் இங்கிலாந்து அரசுக்கு முறைப்படி அனுப்பட்டு உள்ளன.

ஆனால் பிரதமரின் பயண திட்டங்கள் தொடர்பான முழு விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. இதற்கிடையே இங்கிலாந்தின் வெளியுறவுத்துறை செயலாளர் லைஸ் ட்ரூஸ் நேற்று டெல்லி வந்தார். அவர் சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்திர யாதவை சந்தித்து பேசுகிறார். இதன்பிறகு மோடி பயணம் தொடர்பான விவரங்கள் இறுதி செய்யப்படும் என கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து