முக்கிய செய்திகள்

லிரிக்கல் பாடலில் மிரட்டும் ஆர்ஆர்ஆர்.

திங்கட்கிழமை, 15 நவம்பர் 2021      சினிமா
Ram-Charan 2021 11 15

Source: provided

ராஜமௌலி இயக்கத்தில், ராம் சரண் ஜூனியர் என்.டி.ஆர் ஆலியா பட்  உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ள படம் ஆர்ஆர்ஆர். இந்த  திரைப்படத்தின் 'நாட்டு குத்து' என்ற லிரிக்கல் பாடல் சமீபத்தில் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு பாகுபலி படத்திற்கு இசையமைத்த கீரவாணி இசையமைக்கிறார். செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்கிறார். 350 கோடியிலிருந்து 400 கோடி வரையிலான செலவில். விறுவிறுப்பாக உருவாகி வரும் இப்படத்தை  ஜனவரி மாதம் 7 ஆம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது, இந் நிலையில் படத்தின் புரோமோஷன் பணிகளும் இப்போதே துவங்கி விட்டது. ஏற்கனவே இந்த படத்தில் இருந்து கீரவாணி இசையில் அனிரூத் பாடிய, 'நட்பு' பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில், தற்போது ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் நடனத்தில் நாட்டு கூத்து என்ற பாடல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து