முக்கிய செய்திகள்

மாநாடு மேடையில் கண்கலங்கிய சிம்பு

திங்கட்கிழமை, 22 நவம்பர் 2021      சினிமா
Simbu 2021 11 22

Source: provided

வி ஹவுஸ் புரொடக்சன் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடித்துள்ள படம் ‘மாநாடு’. கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடிக்க முக்கிய வேடத்தில் நடிகர் எஸ்ஜே.சூர்யா நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்க,  ரிச்சர்டு ஒளிப்பதிவு செய்ய,  பிரவீன் கே.எல் படத்தொகுப்பு செய்துள்ளார். இந்த வாரம் இப்படம் வெளியாகவுள்ள நிலையில் படத்தின் ப்ரீ ரிலீஸ் புரமோஷன் நிகழ்ச்சி சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது. நிகழ்வில் இயக்குநர்கள் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவில் நாயகன் சிம்பு பேசும்போது, “என் படம்னாலே பிரச்சனைகள் வர்றது வழக்கமா போயிடுச்சு. இந்த மாதிரி சூழல்ல தைரியமா எல்லாத்தையும் எதிர்கொள்ற ஒரு தயாரிப்பாளர் இருந்தா நல்லா இருக்கும்னு முடிவு பண்ணுனப்ப சுரேஷ் காமாட்சி தான் எனக்கு தெரிஞ்சார். மேலும், “என்னை சுற்றி பிரச்சனை பண்ணிக்கிட்டே இருக்காங்க.. ஆனா அந்த பிரச்சனையெல்லாம் நான் பார்த்துக்குறேன்.. என்னை மட்டும் நீங்க பாத்துக்குங்க” என தன்னை தனது ரசிகர்களிடம் ஒப்படைப்பது போல நெகிழ்வாக பேசி திடீரென கண் கலங்கினார்.. அதற்கு மேல் பேச முடியாமல் தனது பேச்சை சட்டென நிறைவு செய்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து