முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுற்றுலாத் துறையில் தனியார் முதலீடுகளை ஈர்க்க தமிழ்நாடு உலகளாவிய சுற்றுலா மாநாடு: முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்

செவ்வாய்க்கிழமை, 27 ஜனவரி 2026      தமிழகம்
Stalin 2024-12-04

சென்னை, வரும் 02.02.2026 மற்றும் 03.02.2026 அன்று நடைபெறவுள்ள "தமிழ்நாடு உலகளாவிய சுற்றுலா மாநாடு-2026" தமிழ்நாடு முதல்வர்  மு.க.ஸ்டாலினால் துவக்கி வைக்கப்படவுள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 2025-2026 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், "சுற்றுலாத் துறையில் தனியார் முதலீட்டை ஊக்குவிக்கும் வகையில், பொது மற்றும் தனியார் துறை முதலீடுகளை ஈர்க்க பொருத்தமான நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, தமிழ்நாட்டு சுற்றுலாத் துறையில் தனியார் முதலீடுகளை ஈர்க்க "தமிழ்நாடு உலகளாவிய சுற்றுலா மாநாடு" நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாத்துறையின் சார்பில் முதல் முறையாக செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் உள்ள தனியார், ஓட்டல் வளாகத்தில் 02.02.2026 மற்றும் 03.02.2026 அன்று நடைபெறவுள்ள "தமிழ்நாடு உலகளாவிய சுற்றுலா மாநாடு-2026" தமிழ்நாடு முதல்வர்  மு.க.ஸ்டாலினால் துவக்கி வைக்கப்படவுள்ளது.

தமிழ்நாடு அரசு சுற்றுலாத் துறையால் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ள இம்மாநாடு, மாநிலத்தின் பல்வேறு சுற்றுலாத் தலங்களை மேம்படுத்துவதற்கும், சுற்றுலா முதலீட்டாளர்களுடன் பொது தனியார் பங்களிப்பை ஊக்குவிப்பதற்கும் ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும். “தமிழ்நாடு உலகளாவிய சுற்றுலா மாநாடு” தமிழ்நாடு சுற்றுலாத் துறையை உலகளாவிய முதலீட்டுத் தலமாக மாற்றும் நோக்கத்துடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இம்மாநாட்டில் உள்நாடு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள், சுற்றுலா பயண ஏற்பாட்டாளர்கள், சுற்றுலாவை மேம்படுத்துபவர்கள், சுற்றுலா மற்றும் வர்த்தக துறைகள் சார்ந்த வர்த்தக நிபுணர்கள் மற்றும் சுற்றுலா தொழில்முனைவோர்கள் ஆகியோரை அரசுடன் ஒருங்கிணைத்து, புதுமையான சுற்றுலா அனுபவங்கள் மற்றும் அதற்கேற்ற உள்கட்டமைப்பு திட்டங்களை ஏற்படுத்துதல் இம்மாநாட்டின் நோக்கமாகும்.

இம்மாநாட்டில் உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா முதலீட்டாளர்கள், சுற்றுலா பயண ஏற்பாட்டாளர்கள், சுற்றுலாவை மேம்படுத்துபவர்கள், சுற்றுலா மற்றும் வர்த்தக துறைகள் சார்ந்த வர்த்தக நிபுணர்கள், சுற்றுலா தொழில்முனைவோர்கள் மற்றும் அரசு உயர்தர பிரதிநிதிகள் இம்மாநாட்டில் கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் சுற்றுலா தொடர்பான வேலைவாய்ப்பும் வர்த்தக வளர்ச்சியும் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்விழாவில் அனைவரும் பங்குகொண்டு விழாவினை சிறப்பிக்க சுற்றுலாத் துறையின் சார்பில் பெருமிதத்துடன் அழைக்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து