முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தே.ஜ.க. கூட்டணியில் டி.டி.வி.தினகரன்: த.வெ.க. தலைமை நிர்வாகி செங்கோட்டையன் விளக்கம்

செவ்வாய்க்கிழமை, 27 ஜனவரி 2026      தமிழகம்
Senkotaiyan- 2025-09-05

Source: provided

சென்னை: த.வெ.க.வுடன் கூட்டணி வைக்கத்தான் டி.டி.வி.தினகரன் விரும்பினார் என்று த.வெ.க. தலைமை நிர்வாகி செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கிறது. ஆளும் கட்சிக்கு முன்னரே முந்தி கொண்ட பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் தேர்தல் பிரசார தேரை ஓட்ட தொடங்கி விட்டார். 

அதே சமயத்தில், மகளிருக்காக செயல்படுத்திய திட்டங்கள் உள்பட தாங்கள் கொண்டு வந்த முக்கிய திட்டங்கள் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளதால், ஆளும் கட்சியான தி.மு.க. நிச்சயம் வருகிற தேர்தலில் வெற்றி பெற்று விடலாம் என்ற நம்பிக்கையில் உள்ளது. இருந்தாலும், ஓரணியில் தமிழ்நாடு என்ற முன்னெடுப்பை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார்.

அதேசமயம் தமிழக சட்டசபை தேர்தலை சந்திக்க த.வெ.க.வும் தீவிரமாக இறங்கியுள்ளது. நடிகர் விஜய் புதிதாக தொடங்கிய கட்சியான தமிழக வெற்றிக் கழகம் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் புதிதாக களம் காண இருக்கிறது. நடிகர் விஜய் நடத்தி வரும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். ஆளுங்கட்சியான தி.மு.க.வும், ஆண்ட கட்சியான அ.தி.மு.க.வும் பல்வேறு கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு வரும் நிலையில், நடிகர் விஜய்யோ, சாத்தியமான திட்டங்களை மட்டுமே மக்களுக்காக நிறைவேற்றுவோம் என்று கூறியிருக்கிறார். 

இந்நிலையில் கோவையில் த.வெ.க. நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- த.வெ.க.வுடன் கூட்டணி வைக்கத்தான் டி.டி.வி. தினகரன் விரும்பினார். சூழ்நிலை காரணமாக டி.டி.வி. இந்த முடிவை எடுத்துள்ளார். எங்கிருந்தாலும் நன்றாக இருக்கட்டும். யாருடன் நாங்கள் கூட்டணி பேச்சுவார்த்தை என கூறினாலும் டெல்லியில் இருந்து வந்து விடுகிறார்கள். பிரச்னை எங்களுக்கு தானே தெரியும். நான் சொல்லாமல் இருக்கும் வரை நல்லது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் ராமதாசுடன் கூட்டணி தொடர்பாக பேசப்படுகிறதே என்ற கேள்விக்கு “நல்லது நடக்கட்டும்” என்று பதில் அளித்து விட்டு சென்றார். முன்னதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பு தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி இருந்தது. தி.மு.க. கூட்டணிக்குள் ராமதாஸ் வருவதற்கு திருமாவளவன் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும், அதி.மு.க. கூட்டணியிலும் ராமதாஸ் தரப்பை சேர்க்கக்கூடாது என அன்புமணி நிபந்தனை விதித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன. இதன்படி ஓரிரு நாட்களில் செங்கோட்டையன் மூலம் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த பாமக (ராமதாஸ்) திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து