முக்கிய செய்திகள்

கோஸ்ட் பஸ்டர் ஆப்டர் லைப் விமர்சனம்

திங்கட்கிழமை, 22 நவம்பர் 2021      சினிமா
Ghostbuster 2021 11 22

Source: provided

டாக்டர் ஈகான் ஸ்ப்லெஞ்லர் என்பவர் ஒரு முன்னாள் கோஸ்ட் பஸ்டர். இவரின் மறைவுக்குப் பின் அவரது பழைய வீட்டுக்கு அவரது மகள் கேலி ஸ்ப்லெஞ்லரும் பேரன் டிரிவர் மற்றும் பேத்தி பியோப் ஆகியோர் வருகிறார்கள். விருப்பம் இல்லாமல் அந்த கிராமத்திற்கு வரும் அவர்களை அமானுஷ்ய சக்திகள் கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமிக்கின்றன. குறிப்பாக பேத்தி பியோப் தனது புது பள்ளியில் கிடைத்த நண்பன் பாட்கேஸ்டருடன் இணைந்து முழுமையாக ஆராய்ச்சியில் சுற்றுகிறார். ஒரு கட்டத்தில் அண்ணன், அம்மா என கைகோர்க மொத்த குடும்பமும் அந்த ஊரையே காப்பாற்றும் பொறுப்பிற்கு ஆளாகின்றனர். கடைசியில் என்ன நடக்கிறது என்பதை அழகாக சொல்லி இருக்கும் படமே இந்த கோஸ்ட் பஸ்டர் படம். பியோபாக வரும் சிறுமி மெக்கென்னா கிரேஸ்தான் படத்தின் முக்கிய பாத்திரம். படத்தில் சின்ன நகரம், வயல்வெளி, அதனுள் ஒளிந்துக் கிடக்கும் மர்மமான மலைகள் என இன்னொரு கேரக்டராகவே சுற்றுகிறது இதன் லொக்கேஷன். முழுக்க குழந்தைகளை மையமாகக் கொண்டு வெளியாகியிருக்கும் இப்படத்தில் கேரி கூன், ஃபின் வுல்ஃப் ஹார்ட், மெக்கென்னா கிரேஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தை ஜேசன் ரீட்மேன் இயக்க சோனி பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து