முக்கிய செய்திகள்

இன்று 11-வது மெகா தடுப்பூசி முகாம்: தமிழகத்தில் 50 ஆயிரம் மையங்களில் நடக்கிறது

புதன்கிழமை, 24 நவம்பர் 2021      தமிழகம்
Vaccination-camp 2021 11 24

Source: provided

சென்னை : தமிழகத்தில் இன்று 11-வது மெகா தடுப்பூசி முகாம் 50 ஆயிரம் மையங்களில் நடக்கிறது. தடுப்பூசி செலுத்திக் கொள்வதை மக்கள் தாமதப்படுத்தக் கூடாது என்றும் முதல் டோஸ் செலுத்தியவர்கள் 2-வது டோசை குறிப்பிடப்பட்டுள்ள தேதியில் போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

கொரோனா தடுப்பூசியை பொதுமக்களுக்கு செலுத்தும் பணியை தமிழக அரசு தீவிரப்படுத்தி வருகிறது. இதில் கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து மெகா தடுப்பூசி முகாமை அரசு நடத்தி வருகிறது. இதில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி செலுத்திக்கொண்டதால் வாரத்தில் வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமை என 2 மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

தமிழ்நாடு முழுவதும் கடந்த 21-ம் தேதி மெகா தடுப்பூசி முகாம் நடந்தது. இதிலும் மெகா தடுப்பூசி முகாமில் மக்கள் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். பெரும்பாலான மையங்களில் மக்கள் கூட்டம் இருந்தது. இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் 11-வது மெகா தடுப்பூசி முகாம் இன்று நடக்கிறது. இதற்காக 50 ஆயிரம் மையங்கள் அமைக்கப்படுகின்றன. சென்னையில் 1600 தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்படுகின்றன.

மெகா தடுப்பூசி முகாம்களுக்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து வருகிறார்கள். தடுப்பூசி செலுத்திக் கொள்வதை மக்கள் தாமதப்படுத்தக் கூடாது என்றும் முதல் டோஸ் செலுத்தியவர்கள் 2-வது டோசை குறிப்பிடப்பட்டுள்ள தேதியில் போட்டுக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து