முக்கிய செய்திகள்

புதுச்சேரியில் நீதிமன்ற வளாகத்தில் மயங்கி விழுந்த அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ. மரணம்

புதன்கிழமை, 24 நவம்பர் 2021      இந்தியா
Puducherry 2021 09 26

Source: provided

புதுச்சேரி : புதுச்சேரியில் வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற முன்னாள் அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினரும் மூத்த வழக்கறிஞருமான பரசுராமன் மாரடைப்பால் உயிரிழந்தார்.

புதுச்சேரி வழக்கறிஞர் சங்கத்துக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், அதன் பதவியேற்பு விழா நேற்று நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற மூத்த வக்கறிஞரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பரசுராமன் திடீரென மயங்கி விழுந்தார், அவரை உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே மாரடைப்பால் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

மாரடைப்பால் உயிரிழந்த பரசுராமன், கடந்த 1991-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டுவரை உருளையன்பேட்டை தொகுதி அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர், தற்போது கிழக்கு மாநில அ.தி.மு.க அவைத்தலைவராக இருந்தார், இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர், மூத்த வழக்கறிஞர் திடீர் உயிரிழப்பால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது இதனைத் தொடர்ந்து பதவியேற்பு நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து