முக்கிய செய்திகள்

இந்தியாவில் புதிதாக 9,119 பேருக்கு கொரோனா தொற்று

corona- 2021 11 25

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,119 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 396 பேர் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டது. அதன்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9 ஆயிரத்து 119 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்று முன்தின பாதிப்பான 9 ஆயிரத்து 283- ஐ விட சற்று குறைவாகும். இதனால், நாட்டில் கொரோனா பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 45 லட்சத்து 44 ஆயிரத்து 882 ஆக அதிகரித்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 10 ஆயிரத்து 264 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3 கோடியே 39 லட்சத்து 67 ஆயிரத்து 962 ஆக அதிகரித்துள்ளது.  வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 லட்சத்து 9 ஆயிரத்து 940 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

ஆனாலும், கொரோனா தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 396 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 66 ஆயிரத்து 980 ஆக அதிகரித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து