முக்கிய செய்திகள்

அறிமுக போட்டியிலேயே அசத்தல்: நியூசி.க்கு எதிரான முதல் டெஸ்ட்டில் இந்திய வீரர் 'ஸ்ரேயாஸ் ஐய்யர்' சதம்

வெள்ளிக்கிழமை, 26 நவம்பர் 2021      விளையாட்டு
Sreyas-Iyer 2021 11 26

Source: provided

கான்பூர் : கான்பூரில் நடந்துவரும் நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வீரர் ஸ்ரேயாஸ் ஐய்யர் அறிமுகப் போட்டியிலேயே சதம் அடித்து அசத்தியுள்ளார்.

பிரித்வி ஷா...

அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே சதம் அடித்த 16-வது இந்திய வீரர் என்ற பெருமையை ஸ்ரேயாஸ் ஐய்யர் பெற்றார். கடைசியாக கடந்த 2018-ம் ஆண்டு ராஜ்கோட்டில், மே.இ.தீவுகள் அணிக்கு எதிராக பிரித்வி ஷா அறிமுகப் போட்டியில் சதம் அடித்திருந்தார். அதன்பின் ஸ்ரேயாஸ் ஐய்யர் அடித்துள்ளார்.

லாலா அமர்நாத்... 

இந்திய அணி சார்பில் முதன்முதலில் டெஸ்ட் போட்டியில் அறிமுக ஆட்டத்திலேயே சதம் அடித்தவர் லாலா அமர்நாத் ஆவார். அதன்பின் ஆர்ஹெச் சோதன், கிர்பால் சிங், அப்பாஸ் அலி பாக், ஹனுமந்த் சிங், குண்டப்பா விஸ்வநாத், சுரேந்தர் அமர்நாத், முகமது அசாருதீன், பிரவிண் ஆம்ரே, சவுரவ் கங்குலி, வீரேந்திர சேவாக், சுரேஷ் ரெய்னா, ஷிகர் தவண், ரோஹித் சர்மா ஆகியோர் அறிமுகப் போட்டியிலேயே சதம் அடித்தனர்.

75 ரன்களுடன்...

இந்திய நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது. கான்பூரில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து ஆடிவருகிறது. நேற்று முன்தினம் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் எடுத்திருந்தது. ஸ்ரேயாஸ் ஐய்யர் ஸ்ரேயாஸ் ஐய்யர் 136 பந்துகளில் 75 ரன்களுடனும் ஜடேஜா 100 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தனர். 

2-ம் நாள் ஆட்டம்... 

2-ம் நாள் ஆட்டம் நேற்று தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் ஜடேஜா சவுத்தி பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்ரேயாஸ் ஐய்யர் தனது முதல் போட்டியிலேயே சதம் அடித்து சாதனை படைத்தார். அறிமுக டெஸ்டில் சதம் அடித்த 16-வது இந்திய வீரர் என்ற பெருமையை அவர் படைத்துள்ளார்.

3-வது இந்திய வீரர்...

நியூஸிலாந்துக்கு எதிராக அறிமுகப் போட்டியிலேயே சதம் அடித்த 3-வது இந்திய வீரர் ஸ்ரேயாஸ் ஐய்யர். இதற்கு முன் கிர்பால் சிங், சுரேந்தர் அமர்நாத் சதம் அடித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து