எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
திருச்சி : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் அடுத்தடுத்து உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் தெற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறக்கூடும் என்பதால் தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
அதன்படி கடலோரம் மற்றும் தென் மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக மத்திய மண்டலத்தில் உள்ள திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் மற்றும் தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும் மழை வெளுத்து வாங்குகிறது.
திருச்சி மாவட்டத்தில் நேற்று முன் தினம் இரவு தொடங்கிய மழை விடிய, விடிய நீடித்தது. காலையிலும் சாரல் மழை பெய்த வண்ணம் உள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
அதிகபட்சமாக திருச்சி மாநகரில் திருச்சி டவுன், திருச்சி ஜங்சன், ஏர்போர்ட் மற்றும் பொன்மலை பகுதிகளில் 206.5 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதனால் மாநகரில் எங்கு பார்த்தாலும் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய வண்ணம் உள்ளது. மீண்டும் கருமண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்தது. மாவட்டத்தின் இதர பகுதிகளில் பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-
லால்குடி-51.80, நந்தியாறு அணைக்கட்டு-66.20, புள்ளம் பாடி-57.80, தேவிமங்கலம்-16.40, சமயபுரம்-37.40, சிறுகுடி-20, வாத்தலை அணைக்கட்டு-31, மணப்பாறை-57.40, பொன்னணியாறு அணை-45.80, கோவில்பட்டி-54.20, மருங்காபுரி-75.40, முசிறி- 15, புலிவலம்-32, தா.பேட்டை- 34, நவலூர் கொட்டப்பட்டு- 60.60, துவாக்குடி-57, கொட்டம்பட்டி-42, தென்பறநாடு- 49, துறையூர்-46.
திருச்சி மாவட்டம் துறையூர் தாலுகா பச்சமலை பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் துறையூரில் உள்ள 285 ஏக்கர் பெரிய ஏரி நள்ளிரவில் நிரம்பி கடை நீர் வழிந்தது.
கடந்த 2005-ம் ஆண்டுக்கு பிறகு இப்போது ஏரி நிரம்பியதால், அப்பகுதி மக்கள் நள்ளிரவிலும் கடைக்கால் வழியும் செச்சை முனீஸ்வரர் கோவிலில் கூடி வழிபாடு செய்து, பட்டாசு வெடித்து மகிழ்ந்தனர்.
இதற்கிடையில் செல்லிபாளையம், சிக்கத்தம்பூர், கீரம்பூர் பகுதி ஏரிகள் ஏற்கனவே நிரம்பி இருந்த நிலையில், நேற்று பெய்த மழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, வெள்ள நீர் ஊருக்குள் புகுந்தது. மேலும் தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் அப்பகுதி முழுவதும் துண்டிக்கப்பட்டது. வெள்ளநீர் மற்றும் மின்சாரம் துண்டிப்பு ஆகியவற்றால் அப்பகுதி மக்கள் வீதிகளில் தவிக்கின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை, ஆலங்குடி, திருமயம், கந்தர்வகோட்டை, அறந்தாங்கி, கோட்டைப்பட்டினம், ஜெகதாபட்டினம், மீமிசல், ஆவுடையார்கோவில், விராலிமலை, இலுப்பூர், அன்னவாசல் உள்ளிட்ட அனைத்து பகுதிகளில் நேற்று முன் தினம் மாலை தொடங்கிய பலத்த மழை நேற்றும் தொடர்ந்தது.
இந்த மழையால் புதுக்கோட்டை நகர் பகுதியில் ஆங்காங்கே குளம்போல் தண்ணீர் தேங்கியுள்ளது. தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் மக்கள் வெளியே வர முடியாமல் தவித்து வருகிறார்கள்.
திருச்சியில் கனமழை
திருச்சியில் பெய்து வரும் கனமழையால் கோரையாற்றில ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் குழுமணி சாலையில் உள்ள செல்வநகர், அரவிந்த் நகர், சீதாலட்சுமி நகரில் உள்ள சுமார் 500க்கும் மேற்பட்ட வீடுகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. இதனிடையே தீயணைப்பு படையினர் அப்பகுதியில் சிக்கியவர்களை படகுகள் மூலம் மீட்டு வருகின்றனர்.
திருச்சியை சுற்றி பெய்துவந்த கனமழையால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கோரையாற்றின் இரண்டு கரையும தொட்டுக்கொண்டு வெள்ளநீர் சீறிப் பாய்ந்து செல்கிறது. மேலும், திருச்சியிலிருந்து மணப்பாறை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், கருமண்டபம் பகுதியில் மழைநீரில் கடந்து செல்வதற்கு மிகவுள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். சாலைகள் அனைத்தும் சேதமடைந்துள்ளது. இதனால் அப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகளும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
பழனி முருகன் கோவிலில் ஹெலிகாப்டரில் வந்து சாமி தரிசனம் செய்த சிங்கப்பூர் மந்திரி
14 Jul 2025பழனி : பழனி முருகன் கோவிலில் ஹெலிகாப்டரில் வந்து சாமி தரிசனம் செய்தார் சிங்கப்பூர் மந்திரி சண்முகம்.
-
நான் துரோகியா? - மல்லை சத்யா ஆவேசம்
14 Jul 2025சென்னை : ம.தி.மு.க.விற்கு நான் நன்றி கடன் பட்டவனாக இருப்பேன் நான் துரோகி அல்ல என்று மல்லை சத்யா கூறினார்.
-
ஆய்வுக்கு பயந்து விருதுநகரில் 200-க்கும் அதிகமான பட்டாசு ஆலைகள் மூடல்
14 Jul 2025விருதுநகர் : விருதுநகரில் நேற்று 200-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் மூடப்பட்டன.
-
ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்
14 Jul 2025காபுல் : ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ரிக்டர் அளவில் பதிவானது.
-
பாஸ்டேக் ஸ்டிக்கரை ஒட்டாமல் இருந்தால் நடவடிக்கை; தேசிய நெடுஞ்சாலை ஆணையம்
14 Jul 2025புதுடெல்லி : பாஸ்டேக் ஸ்டிக்கரை ஒட்டாமல் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.
-
நடத்தை விதிகளை மீறல்: சிராஜுக்கு ஐ.சி.சி.அபராதம்
14 Jul 2025லார்ட்ஸ் : 2-வது இன்னிங்சின் போது பென் டக்கெட் விக்கெட்டை வீழ்த்திய சிராஜ், ஆக்ரோஷமாக கொண்டாடினார். டக்கெட் முகத்திற்கு முன்பு வந்து முறைத்தப்படி சென்றார்.
-
காசாவில் இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 20 குழந்தைகள் உயிரிழப்பு
14 Jul 2025காசா முனை : காசாவில் நடந்த ஏவுகணை தாக்குதலில் 20 குழந்தைகள் பலியாகினர். இதற்கு தொழில்நுட்ப தவறு என இஸ்ரேல் விளக்கம் அளித்துள்ளது.
-
சாய்னா நேவாலின் திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது
14 Jul 2025ஐதராபாத் : 7 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவுக்கு வருவதாகவும், கணவர் காஷ்யப்பை பிரிவதாகவும் சாய்னா நேவால் அறிவித்துள்ளார்.
-
சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மருத்துவமனையில் அனுமதி
14 Jul 2025புதுடெல்லி : சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
-
உ.பி.யில் கனமழைக்கு 14 பேர் பலி
14 Jul 2025லக்னோ : உத்தரபிரதேசத்தில் பெய்த கனமழைக்கு 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
அமெரிக்காவில் மத வழிபாட்டு தலத்தில் துப்பாக்கி சூடு-2 பேர் பலி
14 Jul 2025வாஷிங்டன் : அமெரிக்காவில் மத வழிபாட்டு தலத்தில் துப்பாக்கி சூடு நடந்தது. இதில் 2 பேர் உயிரிழந்தனர்.
-
லார்ட்ஸ் டெஸ்ட் போட்டி: இந்திய அணி திணறல்
14 Jul 2025லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்டில் இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. களத்தில் ரவீந்திர ஜடேஜா மற்றும் முகமது சிராஜ் உள்ளனர்.
-
மேட்டூர் அணை நீர்மட்டம் சரிவு
14 Jul 2025சென்னை : காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீர் வரத்து காரணமாக கடந்த 5ஆம் தேதி நடப்பு ஆண்டி 2-வது மு
-
இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்
14 Jul 2025ஜகார்த்தா : இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகி உள்ளது.
-
தி.மு.க. உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துங்கள்: 'உடன்பிறப்பே வா' நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்
14 Jul 2025சென்னை : தி.மு.க. உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துங்கள் என்று நேற்று நடைபெற்ற 'உடன்பிறப்பே வா' நிகழ்வில் 3 மாவட்ட தி.மு.க.
-
இங்கிலாந்தில் விமானம் தரையில் விழுந்து விபத்து
14 Jul 2025லண்டன் : இங்கிலாந்தில் சிறிய ரக விமானம் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது.
-
இளையராஜா தொடர்ந்த வழக்கில் நடிகை வனிதா பதிலளிக்க உத்தரவு
14 Jul 2025சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா தொடர்ந்த வழக்கில் நடிகை வனிதா விஜயகுமார் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
நடிகை சரோஜா தேவி மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
14 Jul 2025சென்னை : தென்னிந்தியத் திரையுலகின் பழம்பெரும் நடிகையான சரோஜா தேவி மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
மதுரையில் செப். 4-ந் தேதி மாநாடு: ஓ.பி.எஸ். தகவல்
14 Jul 2025சென்னை : மதுரையில் வரும் செப்., 4ம் தேதி நடத்தப்படும் மாநாட்டில், எதிர்காலத்தில் நாம் என்ன முடிவுகளை எடுக்கப்போகிறோம் என்பது குறித்த அறிவிப்பை வெளியிட இருப்பதாக ஓ.பி.எஸ
-
மானாமதுரைக்கு புதிய டி.எஸ்.பி. நியமனம்
14 Jul 2025சிவகங்கை : மானாமுதுரைககு புதிய டி.எஸ்.பி. நியமனம் செய்யப்பட்டார்.
-
பத்திரப்பதிவு அலுவலகத்தில் இன்று கூடுதல் டோக்கன்கள்
14 Jul 2025சென்னை : பத்திரப்பதிவு அலுவலகத்தில் இன்று கூடுதல் டோக்கன் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு தொடங்கியது
14 Jul 2025சென்னை : தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் 417 பொறியியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளில் 90,160 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் உள்ளன.
-
விருந்து நிகழ்ச்சியில் சாம்பியன்கள்
14 Jul 2025கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்றது. இதில் உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் விளையாடினர்.
-
விம்பிள்டன் டென்னிஸ்: முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் சின்னர்
14 Jul 2025லண்டன் : விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் முதல் முறையாக சின்னர் சாம்பியன் பட்டம் வென்றார்.
ஆண்கள் ஒற்றையர்...
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 15-07-2025.
15 Jul 2025