முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விவாதம் இன்றி திரும்பப் பெறுவதா? - மத்திய அரசின் பலவீனத்தையே காட்டுவதாக ராகுல் விமர்சனம்

திங்கட்கிழமை, 29 நவம்பர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : விவாதம் இன்றி வேளாண் சட்டங்கள் திரும்ப பெறப்பட்டது மத்திய அரசின் பலவீனத்தையே காட்டுகிறது என்று காங்கிரஸ் கட்சி தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி கூறினார்.

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. கூட்டத்தொடரின் முதல் நாளில், வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா மீது விவாதம் நடத்த வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தினார்கள். ஆனால் இதை ஏற்க சபாநாயகர் மறுத்து விட்டார். இதைத்தொடர்ந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோ‌ஷமிட்டனர். எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் அமளிக்கு மசோதா நிறைவேற்றப்பட்டிருக்கிறது. விவாதம் இன்றி மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. 

வேளாண் சட்டங்கள் குறித்து விவாதம் நடத்த மத்திய அரசு அச்சம் கொண்டுள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார். விவசாயிகள் உயிரிழப்பு தொடர்பாக விவாதம் நடைபெற்றிருக்க வேண்டும், விவாதம் இன்றி வேளாண் சட்டங்கள் திரும்ப பெறப்பட்டது மத்திய அரசின் பலவீனத்தையே காட்டுகிறது என்றும் அவர் கூறினார். 3 வேளாண் சட்டங்களும் திரும்ப பெறப்படும் என்பது எங்களுக்கு நன்கு தெரியும் என்றும் ராகுல் காந்தி குறிப்பிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து