முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பேராசிரியர் சாலமன் பாப்பையா, பாரதி பாஸ்கர் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்

வெள்ளிக்கிழமை, 3 டிசம்பர் 2021      தமிழகம்
Image Unavailable

பேராசிரியர் சாலமன் பாப்பையா பத்மஸ்ரீ விருது பெற்றதற்காகவும், பட்டிமன்றப் பேச்சாளர் பாரதி பாஸ்கர் அறுவை சிகிச்சை முடிந்து நலமுடன் திரும்பியதற்காகவும் சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று சந்தித்து வாழ்த்து பெற்றனர். இந்தச் சந்திப்பில் பட்டிமன்றப் பேச்சாளர் ராஜா, பாரதி பாஸ்கர் கணவர் பாஸ்கர் ஆகியோர் உடனிருந்தனர்.

சில மாதங்களுக்கு முன்பு, பிரபல பட்டிமன்றப் பேச்சாளர் பாரதி பாஸ்கருக்கு திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டது. சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின், பாரதி பாஸ்கருக்குத் தொலைபேசியில் அழைத்து நலம் விசாரித்தார். இந்த நிலையில் இந்தச் சந்திப்பு நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து