முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒமைக்ரான் அச்சத்தால் மக்களிடம் திடீர் ஆர்வம் : ஒரே நாளில் 1.03 கோடி பேர் தடுப்பூசி போட்டு சாதனை

ஞாயிற்றுக்கிழமை, 5 டிசம்பர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : ஒமைக்ரான் பரவல் அச்சத்தால் ஒரே நாளில் 1.03 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் பீகாருக்கு அடுத்தப்படியாக 14.84 லட்சம் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக ஒன்றிய சுகாதார துறை தெரிவித்துள்ளது. 

புதுவகை உருமாறிய ஒமைக்ரான் கொரோனா வைரஸ் உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலை  ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரஸ் 10 மடங்கு வீரியம் கொண்டது. தடுப்பூசிக்கு  கட்டுப்படாமல், வேகமாக பரவும். பயண கட்டுப்பாடுகளால் ஒமைக்ரான் பரவுவதை  தடுக்க முடியாது என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்தது. இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.

கொரோனா தொற்று  குறைந்து கட்டுப்பாடுகள் தளர்ந்ததால், தடுப்பூசியின் முக்கியத்துவத்தை  சிலர் அலட்சியப்படுத்தி வந்தனர். இந்நிலையில் ஒமைக்ரான் வைரஸ் பரவல் அச்சம்  காரணமாக தற்போது நாடு முழுவதும் தடுப்பூசி போட்டுக் கொள்வோர் எண்ணிக்கை  அதிகரித்துள்ளது. ஒரே நாளில் நாடு முழுவதும் 1.03 கோடி பேர்  தடுப்பூசி போட்டுள்ளனர். இதுவரை 127கோடியே,49லட்சத்து,96ஆயிரத்து,681 டோஸ் தடுப்பூசி  போடப்பட்டுள்ளது. நேற்று ஒரேநாளில் பீகாரில் அதிகபட்சமாக 15.33 லட்சம்,  தமிழ்நாட்டில் 14.84 லட்சம், ராஜஸ்தானில் 10.8 லட்சம், உத்தரபிரதேசத்தில் 10.24 லட்சம் என்ற வரிசையில் மற்ற மாநிலங்களிலும் தடுப்பூசிகள்   போடப்பட்டுள்ளன.

இதுவரை கிடைக்கப் பெற்ற புள்ளி விபரத்தின்படி, 18  வயதுக்கு மேற்பட்டவர்களில் கிட்டத்தட்ட 85சதவீதம் பேர் முதல் டோஸ் தடுப்பூசியை  போட்டுள்ளனர். மேலும் 50.35சதவீதம் பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசியும்  போட்டுள்ளனர். இருந்தாலும் நாடு முழுவதும் 30க்கும் மேற்பட்ட மாவட்டங்களில்  கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருப்பதாக சுகாதார அமைச்சகம் எச்சரித்துள்ளது. 

மேலும் தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா திரும்பியவர்களை  பரிசோதித்தலில் பெங்களூருவை சேர்ந்த இருவர், குஜராத்தில் ஒருவர்,  மும்பையில் ஒருவர், டெல்லியில் ஒருவர் என 5 பேருக்கு ஒமிக்ரான் இருப்பது உறுதி  செய்யப்பட்டுள்ளது. அதனால், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு  தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து