முக்கிய செய்திகள்

இயக்குனர் சந்தீப் நந்தூரி தலைமையில் சாகச சுற்றுலா குறித்த கருத்து கேட்பு கூட்டம்

திங்கட்கிழமை, 6 டிசம்பர் 2021      தமிழகம்
Sandeep-Nanduri- 2021 12 06

சாகச சுற்றுலா குறித்த கருத்து கேட்பு கூட்டம் சுற்றுலாத் துறை இயக்குனர் சந்தீப் நந்தூரி தலைமையில் நடந்தது. 

இது குறித்து அரசின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, 

தமிழக முதல்வர் தலைமையில் நடந்து முடிந்த பஜ்ஜெட் கூட்டத்தொடரில் சுற்றுலாத்துறையின் மானிய கோரிக்கையின் போது சாகச சுற்றுலா சம்மந்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை ஏற்படுத்த வேண்டும் என்று அமைச்சர்  அறிவித்தார். 

அதன் தொடர்ச்சியாக தமிழகத்திலுள்ள அனைத்து  சாகச சுற்றுலா சம்மந்தப்பட்ட சுற்றுலா நடத்துபவர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டு அதற்கான  சாத்திய கூறுகளை  ஆராய்வதற்கான கூட்டம் சுற்றுலாத்துறை தலைமை அலுவலகத்தில் நேற்று சுற்றுலாத்துறை இயக்குநர்  மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை  இயக்குநர் சந்தீப் நந்தூரி தலைமையில் நடைபெற்றது. 

மேலும், இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட சாகச சுற்றுலாவில்  பங்கேற்பவர்கள், நடத்துபவர்கள்  பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நெறிமுறைகள் பற்றி நிலையான வழிகாட்டு முறைகள்  மற்றும் தரம் அகியவற்றை வகுக்க வேண்டிய அவசியம் முக்கியமாக கருதப்படுகின்றது.

அதன்படி நிலம் சார்ந்த சாகச சுற்றுலா,  நீர் சார்ந்த சாகச சுற்றுலா,  ஆகாயம் சார்ந்த சாகச சுற்றுலா என மூன்று முக்கிய சாகச சுற்றுலா வழிகாட்டுதல்கள் அமைக்கப்பட்டுள்ளன.  சாகச சுற்றுலா வழிகாட்டுதலின் முக்கிய நோக்கம், சாகச விளையாட்டுகளில் சுற்றுலா பயணிகளின் பங்கேற்புக்கான  பாதுகாப்பான சூழலை உறுதிப்படுத்துதல்.  அந்தந்த பகுதிகளில் உள்ள சாகச சுற்றுலா நடத்துபவர்கள் தரத்தினை பின்பற்றவும் அவர்களுக்கு அங்கீகாரம் வழங்குவதற்கும். சாகச சுற்றுலா நடத்துபவர்கள் தங்கள் சேவைகளின் தரத்தை மேம்படுத்த உதவுதல். அடையாளம் காணப்பட்ட இடங்களில் தரமான உட்கட்டமைப்பு உருவாக்குதல் மற்றும் மேம்படுத்துதல். சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் அதிகப்பயன்பாட்டினை தவிர்த்தல் போன்றவை ஆகும். இக்கூட்டத்தின் போது விவாதிக்கப்பட்ட வழிகாட்டுதல்கள் குறித்த அனைவரின் கருத்தினையும் ஒருங்கிணைத்து அரசுக்கு சமர்ப்பிக்கப்பட உள்ளது. இவ்வாறு அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து