முக்கிய செய்திகள்

சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ. 103.50 குறைந்தது

சனிக்கிழமை, 1 ஜனவரி 2022      வர்த்தகம்
Cylinder- 2022 01 01

Source: provided

சென்னை : சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.103.50 குறைந்தது. 

எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பினர் பெட்ரோல், டீசல் விலையை தினமும் மாற்றி அமைப்பது போல் சிலிண்டர் விலையின் நிலவரத்தையும் மாதம் ஒரு முறை அல்லது இரண்டு முறை மாற்றி அமைத்து வருகின்றனர். அதன்படி டிசம்பர் மாதத்திற்கான சிலிண்டர் விலை நேற்று மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த வித மாற்றமும் இல்லாமல் ரூ. 915.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 103.50 ரூபாய் குறைந்து 2,131 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.  இந்த விலை மாற்றம் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து