முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

5 மாநில சட்டசபை தேர்தல்: காணொலி காட்சி மூலம் பிரச்சாரம் செய்ய காங்கிரஸ் கட்சி ஏற்பாடு

செவ்வாய்க்கிழமை, 11 ஜனவரி 2022      அரசியல்
Image Unavailable

 உ.பி., பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தராகண்ட் ஆகிய 5 மாநிலங்களில் அடுத்த மாதம் தேர்தல் தொடங்குகிறது. கொரோனா வைரஸ் பரவலால் இந்த மாநிலங்களில் வரும் 15-ம் தேதி வரை நேரடி பிரச்சாரம் செய்ய தலைமை தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

இதையடுத்து காணொலி மூலம் பிரச்சாரத்தில் ஈடுபட காங்கிரஸ் கட்சி ‘கிரீன் ரூம்’ ஏற்பாடு செய்து வருகிறது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் மூத்த தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் டெல்லியில் இருந்தபடியே காணொலி மூலம் பிரச்சாரம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அதற்காக டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் தனி அறை அமைக்கப்படுகிறது. மேலும், சோனியா, ராகுல் இல்லங்களிலும் காணொலி காட்சி மூலம் பிரச்சாரம் செய்ய தனி அறை அமைக்கப்படுகிறது.

அத்துடன், தேர்தல் நடைபெறும் மாநில கட்சி அலுவலகத்திலும் மாவட்ட அலுவலகங்களிலும் தனி அறை அமைக்கப்படுகிறது. அங்கிருந்து காணொலி காட்சி மூலம் கட்சி தலைவர்கள் மக்களை தொடர்பு கொண்டு பிரச்சாரம் செய்ய உள்ளனர். தவிர சமூக வலைதளங்களில் பிரச்சாரத்தில் ஈடுபட காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து