முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இசைக்கருவியை தீயிட்டு கொளுத்திய தலிபான்கள்

ஞாயிற்றுக்கிழமை, 16 ஜனவரி 2022      உலகம்
Image Unavailable

Source: provided

காபூல் : ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதையடுத்து அந்நாட்டில் பல்வேறு சமூக, கலாச்சார கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்றாக இசையும் பல்வேறு இடங்களில் தடை செய்யப்பட்டுள்ளது.

வாகனங்களில் செல்வோர் இசை கேட்கவும், திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் இசை வாத்தியங்களை ஒலிக்கவும் தலிபான்கள்  தடை விதித்திருந்தனர். இந்நிலையில் தற்போது உள்ளூர் இசையமைப்பாளர் ஒருவரின் இசைக்கருவிகளை பிடுங்கி நடு வீதியில் தீயிட்டு எரிக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தான் பாக்தியா மாகாணத்தில் எடுக்கப்பட்ட இந்த வீடியோவில் இசையமையாளர் ஒருவரிடம் இருந்து இசைக்கருவி பிடுங்கப்பட்டு, நடுரோட்டில் தீயிட்டு எரிக்கப்படுகிறது. இதை கண்டு அந்த இசையமைப்பாளர் அழுகிறார். ஆனால் தலிபான்கள் அவரின் அவல நிலையை கண்டு சிரிக்கின்றனர்.

இந்த வீடியோவை ஆப்கானிஸ்தானை சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து