முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிகரிக்கும் கொரோனா தொற்று: தமிழகத்தில் 29 ஆயிரத்தை நெருங்கிய தினசரி பாதிப்பு

வியாழக்கிழமை, 20 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 28 ஆயிரத்து 561 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது., தமிழகத்தில் புதிதாக 1 லட்சத்து 54 ஆயிரத்து 912 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் மொத்தம் 28 ஆயிரத்து 561 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில் இதுவரை 30 லட்சத்து 42 ஆயிரத்து 796 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. 

இதில் அதிகபட்சமாக சென்னையில் 7,520 பேரும், கோவையில் 3,390 பேரும், செங்கல்பட்டில் 2,196 பேரும், கன்னியாகுமரியில் 1,148 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி 1 லட்சத்து 79 ஆயிரத்து 205 பேர் மருத்துவமனைகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

கொரோனாவுக்கு தமிழகத்தில் நேற்று 39 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் இதுவரை மொத்தம் 37 ஆயிரத்து 112 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 19 ஆயிரத்து 978 பேர் ‘டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டு உள்ளனர். இதுவரையில் 28 லட்சத்து 26 ஆயிரத்து 479 பேர் குணம் அடைந்து உள்ளனர்.  இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து