முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக மீனவர்களின் 105 படகுகளை ஏலம் விட இலங்கை அரசு முடிவு

ஞாயிற்றுக்கிழமை, 23 ஜனவரி 2022      உலகம்
Image Unavailable

Source: provided

யாழ்ப்பாணம் : தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லும்போது அவர்களை தாக்குவதையும், அவர்களின் படகுகளை பறிமுதல் செய்வதையும் இலங்கை அரசு தொடர்ந்து செய்து வருகிறது. இந்நிலையில் இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் 105 படகுகளை ஏலத்தில் விடுவதற்கு அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

இந்த ஏலம் பிப்ரவரி 7-ம் தேதி முதல் 5 நாட்களுக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 7-ம் தேதி யாழ்ப்பாணம் காரைநகரில் 65 படகுகளையும், பிப்ரவரி 8-ம் தேதி காங்கேசன்துறையில் 5 படகுகளையும், பிப்ரவரி 9-ம் தேதி கிராஞ்சியில் 24 படகுகளையும், பிப்ரவரி 10-ம் தேதி தலைமன்னாரில் 9 படகுகளையும், பிப்ரவரி 11-ம் தேதி கற்பிட்டியில் 2 படகுகளையும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை ஏலம் விடப்போவதாக அறிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து