முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இஸ்ரேல் பாதுகாப்பு படையினர், பாலஸ்தீனர்கள் இடையே மோதல் : 100-க்கும் மேற்பட்டோர் காயம்

செவ்வாய்க்கிழமை, 17 மே 2022      உலகம்
Israel 2022-05-17

Source: provided

ஜெருசலேம் : இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் மற்றும் பாலஸ்தீனியர்கள் இடையே நடைபெற்ற மோதலில் நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். 

பாலஸ்தீனத்தின் மேற்குகரை மற்றும் காசா முனை பகுதியில் இருந்து இஸ்ரேல் மீது அவ்வப்போது தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதற்கு இஸ்ரேல் தரப்பிலும் பதில் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த மாதம் 22-ம் தேதி இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும் , பாலஸ்தீனர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் படுகாயம் அடைந்த லாவிட் ஷெரீப் என்ற 21 வயதான பாலஸ்தீன இளைஞர் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

இதனையடுத்து, உயிரிழந்த ஷெரீப்பின் உடல் அல் அக்சா இஸ்லாமிய மத வழிபாட்டு தலத்தில் வைக்கப்பட்டு பின்னர் ஜெருசலேம் பழைய நகர் பகுதியில் அடக்கம் செய்ய ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. அப்போது, இஸ்ரேலிய படையினர் பாலஸ்தீனர்கள் சிலர் கற்கள் வீசினர். எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்களும் வீசப்பட்டது.

இதனால், இரு தரப்பினருக்கும் இடையே மோதல் வெடித்தது. இந்த மோதலில் 100பேர் காயமடைந்தனர். இதில் 15-க்கும் மேற்பட்டவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இரு தரப்பினர் மோதலை அடுத்து ஜெருசலேமில் பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து