முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரள மாநிலத்தை தொடர்ந்து பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைத்தன ராஜஸ்தான், மகாராஷ்டிரா

திங்கட்கிழமை, 23 மே 2022      இந்தியா
Petrol-Diesel 2022-05-23

கேரள மாநிலத்தை தொடர்ந்து பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை ராஜஸ்தான், மகாராஷ்டிரா மாநில அரசுகள் குறைத்துள்ளன.

பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை குறைப்பதாக மத்திய அரசு கடந்த சனிக்கிழமை அறிவித்தது. அதன்படி பெட்ரோல் மீதான உற்பத்தி வரி லிட்டருக்கு ரூ.8 மற்றும் டீசல் மீதான உற்பத்தி வரி லிட்டருக்கு ரூ.6 குறைக்கப்பட்டது. இதன் மூலம் பெட்ரோல் டீசல் விலை சற்று குறைந்தது. இது தொடர்பான அறிவிப்பை டுவிட்டரில் வெளியிட்ட மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், மக்கள் பயன் அடையும் வகையில் மாநில அரசுகளும் பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க வேண்டும் என அழைப்பு விடுத்தார். 

அதன்படி பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை குறைக்கும் மத்திய அரசின் அறிவிப்பு வெளியான சில மணி நேரத்திலேயே பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைப்பதாக கேரள மாநில அரசு அறிவித்தது. அங்கு பெட்ரோல் மீதான வாட் வரி ரூ.2.41-ம் டீசலுக்கான வாட் வரி லிட்டருக்கு ரூ. 1.36-ம் குறைக்கப்பட்டது. 

கேரளாவை தொடர்ந்து, மராட்டியம் மற்றும் ராஜஸ்தான் மாநில அரசுகளும் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைத்துள்ளன. சிவசேனா தலைமையிலான மராட்டிய அரசு பெட்ரோல் மீதான வாட் வரியை லிட்டருக்கு ரூ.2.08 மற்றும் டீசல் லிட்டருக்கு ரூ.1.44 என்று குறைத்துள்ளது. இந்த முடிவால் ஆண்டுக்கு ரூ.2,500 கோடி இழப்பு ஏற்படும் என்று அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!