முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிரிப்டோகரன்சியில் ஒரு டாலரை கூட முதலீடு செய்யவில்லை: பில்கேட்ஸ்

செவ்வாய்க்கிழமை, 24 மே 2022      உலகம்
Bill-Gates 2022 05 11

Source: provided

வாஷி்ங்டன் : கிரிப்டோகரன்சியில் தான் எந்த முதலீடுகளையும் செய்யவில்லை என பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார்.

 கடந்த சில மாதங்களாக கிரிப்டோகரன்சிகளில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் வேளையில், முதலீடு செய்யப்பட்ட நாணயங்கள் கடுமையான சந்தை மதிப்பை இழந்து வருகின்றன. கிரிப்டோவின் அடையாளமான பிட்காயினின் ஓர் பங்கின் விலை மூன்று வாரத்தில் ரூ. 32 லட்சத்தில் இருந்து தற்போது ரூ. 24 லட்சமாக குறைந்ததுள்ளது.

இதேபோல பல நாணயங்களும் பெரிய சரிவைச் சந்தித்து வருகின்றன. மேலும், எலான் மஸ்க் முதலீடு செய்திருக்கும் கிரிப்டோ நாணயமான டோஜ் காயினின் விலையும் குறைந்து காணப்படுவதால்  முதலீட்டாளர்கள் புலம்பி வருகிறார்கள்.   

இந்நிலையில், உலக பெரும் செல்வந்தவர்களில் ஒருவரான மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸிடம் கிரிப்டோகரன்சி குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பில்கேட்ஸ், மற்ற முதலீடுகளைப்போல இதில் முதலீடு செய்ய எனக்கு விருப்பமில்லை. இதுவரை நான் கிரிப்டோகரன்சியில் ஒரு டாலரைக்கூட முதலீடு செய்யவில்லை என தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து