முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமைச்சர் சாமிநாதனின் தாயார் மறைவு : முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

புதன்கிழமை, 25 மே 2022      தமிழகம்
Stalin 2022 01 07

Source: provided

சென்னை : தமிழக செய்தித்துறை அமைச்சர் சாமிநாதனின் தாயார் மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். 

திருப்பூர் தி.மு.க. கிழக்கு மாவட்ட பொறுப்பாளர், தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக் குழு உறுப்பினர், அமைச்சர் மு.பெ.சாமிநாதனின் சொந்த ஊர் முத்தூராகும். முத்தூர் வேலம்பாளையம் பங்களா தோட்டத்தில் அமைச்சரின் தாயார் தங்கமணி (89) வசித்து வந்தார். அவர் வயது முதிர்வின் காரணமாக நேற்று உயிரிழந்தார். அமைச்சர் திருப்பூர், காங்கயத்தில் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்ததால் உடனடியாக வீடு திரும்ப தாமதமானது.  

அமைச்சர் மு.பெ. சாமிநாதனின் தாயார் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.  இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது, 

அமைச்சர் மு.பெ.சாமிநாதனின் தாயார் தங்கமணி அம்மாள் இயற்கை எய்தினார் என்பதை அறிந்து வருந்துகிறேன். தன்னை இத்தனை ஆண்டுகாலம் போற்றி வளர்த்த, தன் வளர்ச்சியைக் கண்டு உவகையும் பெருமையும் கொண்ட அருமைத் தாயாரை இழந்து நிற்கும் அமைச்சர் சாமிநாதனின் துயரத்தில் நானும் பங்கெடுக்கிறேன். அன்னையின் இழப்பால் மனம் அல்லலுற்றுள்ள சாமிநாதனுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அந்த இரங்கல் செய்தியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!