முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி.ராஜேந்தரிடம் நேரில் நலம் விசாரித்தார் கமல்ஹாசன்

செவ்வாய்க்கிழமை, 14 ஜூன் 2022      சினிமா
Kamal 2022-06-14

Source: provided

சென்னை : மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் டி.ராஜேந்தரை கமல்ஹாசன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

நடிகரும் இயக்குநருமான டி.ராஜேந்தருக்கு கடந்த மாதம் 19-ம் தேதி உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டார். பரிசோதித்த டாக்டர்கள், இதயத்துக்கு செல்லக் கூடிய ரத்த குழாயில் அடைப்பு இருப்பதைக் கண்டறிந்தனர்.

அவருக்கு அமெரிக்காவில் உள்ள புரூக்ளின் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக சென்னையில் இருந்து டி.ஆர். அமெரிக்கா புறப்பட்டு செல்வார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இந்த நிலையில், டி.ராஜேந்தரை மருத்துவமனைக்கு நேரில் சந்தித்து கமல்ஹாசன் நலம் விசாரித்தார். மேலும், அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை டுலிட்டரில் பகிர்ந்த கமல்ஹாசன், நலமுடன் திரும்பி வாரும் சகோதரரே என்று பதிவிட்டுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!