முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுழல் விமர்சனம்

ஞாயிற்றுக்கிழமை, 19 ஜூன் 2022      சினிமா
Cycle-Review 2022 06 19

Source: provided

விக்ரம் வேதா புகழ் புஷ்கர் காயத்ரி தம்பதி உருவாக்கியுள்ள வெப் தொடர் சுழல். இந்த வெப் தொடரில் கதிர், பார்த்திபன், ஐஸ்வர்யா ராஜேஷ், , ஷ்ரேயா ரெட்டி உள்பட ஏராளமான பிரபலங்கள் நடித்துள்ளனர். வால்வாட்சர் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த வெப் தொடரை பிரம்மா மற்றும் அணுசரண் ஆகியோர் இணைந்து இயக்கி உள்ளனர். 8 எபிசோடுகளை கொண்ட இந்த வெப் தொடரில் முதல் 4 எபிசோடை பிரம்மாவும், அடுத்த 4 எபிசோடை அனுசரணும் இயக்கி உள்ளார். இந்த வெப் தொடர் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. கதை, இந்த வெப்சீரிஸில் யாரை சந்தேகிப்பது, யாரை சந்தேகப்படாமல் இருப்பது என்றே தெரியாத அளவுக்கு திரைக்கதையை அட்டகாசமாக வடிவமைத்துள்ளனர் புஷ்கர் மற்றும் காயத்ரி. பார்த்திபன், ஐஸ்வர்யா ராஜேஷ், கதிர், ஸ்ரேயா ரெட்டி என முக்கிய கதாபாத்திரங்களின் நடிப்பு அத்தனையுமே படத்திற்கு பலம் தான். முகேஷ்வரனின் ஒளிப்பதிவில் அந்த மலை கிராமத்தின் அழகு. ஹெலிகேம் ஷாட்களை பயன்படுத்திய விதம். மயான கொள்ளையை காட்சிப்படுத்திய விதம். அதன் பின்னணி இசையில் பயமுறுத்தும் சாம் சி.எஸ் என பல பிளஸ்கள் இந்த வெப்சீரிஸில் உள்ளன. அனைத்திற்கும் மேலாக, ஒரு கட்டத்தில் இவர் தான் வில்லன் என சந்தேகிக்கப்பட்டாலும், மீண்டும் அவரை மறக்கடிக்க வைக்கும் திரைக்கதை மிகப்பெரிய பலம் என்பது குறிப்பிடத்தக்கது. போலீஸ் அதிகாரி சக்கரையாக கதிர் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். அவருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கும் இருக்கும் நட்பு, தம்பி மாதிரி இருந்த ஒருவருக்கு என்ன ஆனது என்பதை தேடும் ஆர்வம், சந்தேகிக்கும் நபர்கள் எல்லாம் கெட்டவர்கள் இல்லை என்பதை புரிந்து கொள்ளும் பக்குவம் என பல விஷயங்களை சொன்னாலும், கடைசியில் சொல்லும் கிளைமேக்ஸ் யாரையும் கண்மூடித் தனமாக நம்பி விடக் கூடாது என்பதை கனமாக மனதில் இறக்குகிறது இத்தொடர்,  மொத்தத்தில் இந்த சுழல் தொடர் 100 சதவீதம் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்துள்ள அருமையான படைப்பு. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து