முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மருத்துவமனை : இந்து அறநிலையத் துறை சார்பில் அமைகிறது

திங்கட்கிழமை, 20 ஜூன் 2022      ஆன்மிகம்
Meenashi 2022-06-20

Source: provided

மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தரிசனத்திற்காக வரும் பக்தர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அவசர சிகிச்சையளிக்க இந்து அறநிலையத்துறை சார்பில் மருத்துவமனை அமைக்கப்பட உள்ளது.

உலகப்புகழ் பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்து தினமும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனத்துக்காக வருகின்றனர். தரிசனத்திற்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு மாரடைப்பு, மயக்கம் உட்பட திடீரென சில உடல்நலக்குறைவு ஏற்படுவது இயல்பு. இதற்காக அவசர சிகிச்சைக்கு மருத்துவமனை அழைத்துச் செல்ல ஒரு ஆம்புலன்ஸ் உள்ளது. இந்நிலையில் முதலுதவி உட்பட விரைந்து சிகிச்சையளிக்க இந்து அறநிலையத்துறை சார்பில் மருத்துவமனையும் அமைய உள்ளது.

இதுகுறித்து கோவில் அதிகாரி ஒருவர் கூறுகையில்,  பக்தர்களின் வசதிக்காக மருத்துவமனை அமைப்பது தொடர்பாக தமிழக அரசுக்கு பரிந்துரை அனுப்பி உள்ளோம். தலா 2 டாக்டர்கள், செவிலியர்கள், பணியாளர்கள், உதவியாளர்கள் இருப்பர். உடல்நலக்குறைவு ஏற்படும் பக்தர்களுக்கு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்படும். பணிகள் முடிக்கப்பட்டபின் இம்மருத்துவமனை தற்காலிகமாக கோவில் உள்ளே ஒரு கட்டிடத்தில் செயல்படும்.

படுக்கை வசதியும் உண்டு. மேல் சிகிச்சைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்படுவர் என்றார். மேலும் மருத்துவ அலுவலர், செவிலியர் பணிக்கு விண்ணபிக்க விரும்புவோர் இந்து மதத்தவராக, தமிழகத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்பது உட்பட பல நிபந்தனைகள் உள்ளன. விண்ணப்ப படிவம், நிபந்தனைகளை www.maduraimeenakshi.org, www.tnhrce.gov.in ஆகிய இணையதளங்களில் பதிவிறக்கம் செய்யலாம் என்றும் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து