முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாலத்தீவில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் மீது சரமாரி தாக்குதல்

செவ்வாய்க்கிழமை, 21 ஜூன் 2022      உலகம்
Maldive-Yoga 2022-06-21

Source: provided

மெல் : சர்வதேச யோகா தினம் உலகம் முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. பல்வேறு நாடுகளில் யோகா நிகழ்ச்சிகள் நடந்தன. இந்த யோகா நிகழ்ச்சிகளில் லட்சக்கணக்கானோர் பங்கேற்று யோகா பயிற்சி செய்தனர்.

அந்த வகையில் மாலத்தீவிலும் நேற்று யோகா நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அந்நாட்டின் தலைநகர் மெலில் உள்ள ஒரு கால்பந்து மைதானத்தில் யோகா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யபட்டிருந்தது. இந்த யோகா நிகழ்ச்சி மாலத்தீவு அரசு மற்றும் இந்திய கலாச்சார மையம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

இந்நிலையில், கால்பந்து மைதானத்தில் நேற்று காலை யோகா நிகழ்ச்சிகள் நடைபெற்று கொண்டிருந்த போது, யோகா நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து 50-க்கும் மேற்பட்டோர் அடங்கிய கும்பல் மைதானத்திற்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டது. யோகா நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த நபர்கள் மீதும் அந்த கும்பல் சரமாரி தாக்குதல் நடத்தியதோடு நிகழ்ச்சியையும் நிறுத்தியது. இந்த சம்பவம் மாலத்தீவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

யோகா நிகழ்ச்சிக்கு இடையூறு செய்யும் நோக்கத்தில் மைதானத்திற்குள் 50-க்கும் மேற்பட்டோர் கொண்ட கும்பல் மைதானத்திற்குள் நுழைந்து யோகா செய்து கொண்டிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். கும்பல் மைதானத்திற்குள் நுழைவதை கண்டு யோகா பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தவர்கள் அங்கிருந்து வெளியேற முயற்சித்தனர்.

ஆனாலும், அந்த கும்பல் தாக்குதலில் ஈடுபட்டது. இந்த சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு தடியடி நடத்தி கும்பலை கலைத்தனர். மேலும், இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள மாலித்தீவு அதிபர் இப்ராகிம் முகமது சொலிக் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். யோகா நடைபெற்ற மைதானத்திற்குள் போராட்டக்காரர்கள் ஆக்ரோஷமாக நுழையும் வீடியோ வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து