எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அ.தி.மு.க பொதுக்குழுக் கூட்டம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை வரும் ஜூலை 4-ம் தேதியன்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அ.தி.மு.க பொதுக்குழு கூட்டம் ஜூன் 23-ம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஏற்கெனவே முடிவு செய்யப்பட்ட 23 தீர்மானங்கள் தவிர புதிய முடிவுகள் எடுக்க தடை கோரி பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, பொதுக்குழு கூட்டத்தில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த நீதிமன்றம் ஊகித்து முன்கூட்டியே உத்தரவு பிறப்பிக்க முடியாது என்றும் கட்சி மற்றும் சங்க விவகாரங்களில் நீதிமன்றம் பொதுவாக தலையிடுவது இல்லை எனக்கூறி பொதுக்குழு கூட்டத்துக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து சண்முகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை நீதீபதிகள் துரைசாமி மற்றும் சுந்தர் மோகன் அமர்வு விசாரித்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், திட்டமிட்டபடி பொதுக்குழு நடத்தலாம், அதில் 23 தீர்மானம் மட்டும் நிறைவேற்றலாம், மற்ற விவகாரங்கள் குறித்து விவாதிக்கலாமே தவிர எந்த முடிவும் எடுக்க கூடாது என்று உத்தரவிட்டிருந்தனர். இதைத்தொடர்ந்து ஜூன் 23-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்படுவதாக பொதுக்குழு உறுப்பினர் சி.வி.சண்முகம் அறிவித்தார்.
மேலும், நிரந்தர அவைத் தலைவராக தமிழ்மகன் உசேனை நியமிக்கும் தீர்மானத்தை இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி முன்மொழிந்தார். அதனை, பொதுக்குழு உறுப்பினர்கள் டி.ஜெயக்குமார் மற்றும் திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் வழிமொழிந்தனர். அடுத்த பொதுக்குழு கூட்டம் ஜூலை 11-ம் தேதி நடைபெறும் என தமிழ்மகன் உசேன் அறிவித்தார்.
இதையடுத்து, நீதிமன்ற உத்தரவை மீறி ஜூலை 11-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சண்முகம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், உயர் நீதிமன்ற உத்தரவை வேண்டுமென்றே அவமதித்த இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், டி.ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன், கே.பி.முனுசாமி, அவை தலைவராக நியமிக்கப்பட்டுள்ள தமிழ் மகன் உசேன் ஆகியோரை நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும்.
அதேபோல, பொதுக்குழுவில் 23 தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், அவைத் தலைவராக தமிழ்மகன் உசேனை நியமிக்கும் தீர்மானத்தை முன்மொழிந்த இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, அதை வழிமொழிந்த டி.ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோரை நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் கீழ் தண்டிக்க வேண்டும்.
தமிழ்மகன் உசேன் நியமிக்கப்பட்டதே நீதிமன்ற அவதிப்பாக உள்ளபோது, அடுத்தப் பொதுக்குழு ஜூலை 11-ம் தேதி நடைபெறும் என அவர் அறிவித்தது மன்னிக்க முடியாத செயலாகும்.இது நீதிமன்ற உத்தரவை மீறுவதற்கான சதித்திட்டத்தை வெளிப்படுத்துகிறது. நிரந்தர அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் நியமிக்கப்பட்ட உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்.
கட்சி விதிகளின்படி ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் இணைந்து பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்காததால், ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழுக் கூட்டம் நடத்தவும் தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்கக் கோரி நீதிபதிகள் துரைசாமி மற்றும் சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் , சண்முகம் தரப்பில் நேற்று முறையீடு செய்யப்பட்டது. இதுதொடர்பான மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உயர்நீதிமன்றம், ஜூலை 11 ம் தேதி நடைபெற இருந்த அ.தி.மு.க பொதுக்குழுவுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை மட்டும் ஜூலை 4-ம் தேதி விசாரிக்க உயர்நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு
21 Feb 2026மதுரை, மதுரை விமான நிலையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
-
சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு: தி.மு.க. - இ.யூ.மு.லீக் இன்று பேச்சுவார்த்தை
21 Feb 2026சென்னை, தி.மு.க. - இந்திய யூனியன் முஸ்லிம் கட்சி சார்பில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்று நடைபெறுகிறது.தி.மு.க.
-
த.வெ.க.வில் சட்டசபை தேர்தல் கண்காணிப்பாளர்கள் நியமனம்: விஜய் உத்தரவு
21 Feb 2026சென்னை, த.வெ.க. சார்பில் சட்டப்பேரவைத் தேர்தல் பணிகளை மேற்கொள்ள தேர்தல் கண்காணிப்பாளர்களை நியமித்து அந்தக் கட்சியின் தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
-
அவதூறு வழக்கில் ராகுலுக்கு நீதிமன்றம் ஜாமீன்
21 Feb 2026பிவாண்டி, ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி தொடர்ந்த அவதூறு வழக்கு காரணமாக ராகுல் காந்தி, மகாராஷ்டிராவின் பிவாண்டி நீதிமன்றத்தில் ஆஜரானார். அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
-
ஊட்டி மலை ரயில் கட்டணம் உயர்வு
21 Feb 2026நீலகிரி, ஊட்டி மலை ரயில் கட்டணம் 5 சதவீதம் உயர்வால் சுற்றுலா பயணிகள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
-
டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பிரேசில் அதிபர் பேச்சு
21 Feb 2026புதுடெல்லி, டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பிரேசில் அதிபர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
-
தலைநகர் டெல்லியில் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்த பாகிஸ்தான தீவிரவாதிகள் திட்டம்: உளவு துறை எச்சரிக்கை - தீவிர கண்காணிப்பு
21 Feb 2026புதுடெல்லி, டெல்லியில் குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு நடத்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுதுறை எச்சரிக்கை விடுத்ததை அடுத்து கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத
-
டெல்லி ஏ.ஐ. மாநாட்டில் காங்., போராட்டம் ஒரு திட்டமிட்ட சதி: அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றஞ்சாட்டு
21 Feb 2026டெல்லி, காங்கிரஸ் இளைஞர் பிரிவினர் ஏ.ஐ. மாநாட்டில் நடத்திய போராட்டம் தவறாக நடத்தப்பட்டது அல்ல. நன்றாக திட்டமிட்ட சதி.
-
கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப்பங்கீடு: பேச்சுவார்த்தை நடத்த 7 பேர் குழுவை அமைத்தது தி.மு.க.!
21 Feb 2026சென்னை, கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப்பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்திட 7 பேர் கொண்ட குழு அமைத்து தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
-
சுங்கச்சாவடிகளில் வரும் ஏப்.1 முதல் பாஸ்டேக், யு.பி.ஐ. மூலம் மட்டும் கட்டணம் வசூல்
21 Feb 2026புதுடெல்லி, வரும் ஏப்ரல் 1சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக், யு.பி.ஐ. கட்டணம் மட்டுமே ஏற்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
சங்பரிவார் சேவகராகவே மாறிய இ.பி.எஸ்: கனிமொழி விமர்சனம்
21 Feb 2026சென்னை, சங்பரிவார் சேவகராகவே மாறிய எடப்பாடி பழனிசாமி என்று கனிமொழி எம்.பி. விமர்சித்துள்ளார்.
-
எந்த வடிவில் மொழித் திணிப்பு வந்தாலும் அதனை வீழ்த்துவோம்: துணை முதல்வர் உதயநிதி உறுதி
21 Feb 2026சென்னை, எந்த வடிவில் மொழித் திணிப்பு வந்தாலும் அதனை வீழ்த்துவோம் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
கொரோனா காலத்தில் பணியாற்றிய 668 செவிலியர்களுக்கு பணிநியமனம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்
21 Feb 2026சென்னை, தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ்.
-
இந்தியா வரி செலுத்தும்; அமெரிக்கா செலுத்தாது: தீர்ப்பிற்கு பிறகு ட்ரம்ப் விளக்கம்
21 Feb 2026நியூயார்க், அமெரிக்க உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பினால் எதுவும் மாறவில்லை, இந்தியா வரி செலுத்தும், அமெரிக்கா வரி செலுத்தாது, பிரதமர் மோடி ஒரு சிறந்த மனிதர் என்று அந்நா
-
தமிழருக்கு அ.தி.மு.க. அரணாக விளங்கும்: எடப்பாடி பழனிசாமி
21 Feb 2026சென்னை, அ.தி.மு.க. என்றென்றும் மக்களுக்கு அரணாக விளங்கும் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
-
டித்வா புயல் பாதிப்புக்கு இந்தியா நிதி உதவி: பிரதமர் மோடிக்கு இலங்கை அதிபர் நன்றி
21 Feb 2026புதுடெல்லி, டித்வா புயல் பாதிப்புக்கு இந்தியா நிதி உதவி அளித்ததற்காக பிரதமர் மோடிக்கு இலங்கை அதிபர் நன்றி தெரிவித்துள்ளார்.
-
தாய்மொழி உடலுக்கு உயிர்: உலக தாய்மொழி தினத்தில் கமல் பதிவு
21 Feb 2026சென்னை, தாய்மொழி உடலுக்கு உயிர் என்று உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு நடிகர் கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.
-
ரூ.1536.31 கோடி செலவில் கூட்டுக் குடிநீர் திட்டம் உள்ளிட்ட மதுரையில் ரூ.1,805.78 கோடியில் முடிவுற்ற புதிய திட்டப்பணிகள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
21 Feb 2026மதுரை, மதுரையில் 867 ஊரகக் குடியிருப்புகளுக்கு ரூ.1536.31 கோடி செலவிலான கூட்டுக் குடிநீர் திட்டம் உள்ளிட்ட ரூ.1,805.78 கோடியில் முடிவுற்ற புதிய திட்டப்பணிகளை முதல்வர் ம
-
மக்களிடம் இருந்து மக்களுக்காக உருவான இயக்கம்: தி.மு.க. இயக்கத்தை சீண்டினால் தமிழ்நாடே பதிலடி கொடுக்கும்: மதுரை தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்
21 Feb 2026மதுரை, மக்களிடம் இருந்து மக்களுக்காக உருவான இயக்கம் தி.மு.க., இந்த இயக்கத்தை சீண்டினால் தமிழ்நாடே பதிலடி கொடுக்கும் என்று நேற்று மதுரையில் நடைபெற்ற தென்மண்டல தி.மு.க.
-
அமெரிக்க உச்சநீதிமன்றம் தீர்ப்பு: அனைத்து நாடுகளுக்கும் புதிதாக 10 சதவீதம் வரியை விதித்த ட்ரம்ப்
21 Feb 2026நியூயார்க், உலக நாடுகளின் பொருள்கள் மீது விதிக்கப்பட்ட பரஸ்பர இறக்குமதி வரி உள்பட அவசர அதிகாரங்கள் சட்டத்தின் கீழ், அமெரிக்க அதிபா் ட்ரம்ப் விதித்த வரிகள் செல்லாது என்ற
-
வரிகளை ரத்து செய்து அமெரிக்க உச்ச நீதிமன்ற வழங்கிய தீர்ப்பு அவமானத்துக்குரியது: ட்ரம்ப்
21 Feb 2026நியூயார்க், அமெரிக்க அரசு பிறப்பித்த வரி விதிப்புகளை செல்லாது என்று அவற்றை ரத்து செய்த உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பு அவமானத்துக்குரியது, அபத்தமானது என்று மாகாண ஆளுநா்கள்
-
வார ராசிபலன்
21 Feb 2026 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
21 Feb 2026- திருக்கோஷ்டியூர் செளமிய நாராயணப் பெருமாள் உற்சவாரம்பம்.
- மதுரை கூடலழகர் ஆண்டாள் திருக்கோலம், இரவு அனுமார் வாகனத்தில் ராமாவதாரக் காட்சி.
- காங்கேயம் முருகர் மயில் வாகனம்.
-
இன்றைய நாள் எப்படி?
21 Feb 2026


