முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்ப்பிணியாக புகைப்படம் வெளியிட்ட பிரபல நடிகை இன்ஸ்டாவில் விறுவிறு வைரல்

வியாழக்கிழமை, 30 ஜூன் 2022      சினிமா
thumb

Source: provided

விஜய் நடித்த மாஸ்டர்படத்தை தயாரித்த சேவியர் பிரிட்டோ அடுத்துவாசுவின் கர்ப்பிணிகள்என்ற படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.ஜீவி பிரகாஷ் நடித்தபென்சில்படத்தை இயக்கிய இயக்குனர் மணிநாகராஜ் இப்படத்தை இயக்க உள்ளார். அவின் மோகன் சித்தாரா இசையமைக்கிறார். பிகே வர்மா ஒளிப்பதிவு செய்ய விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பு செய்கிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன், ‘வாசுவின் கர்ப்பிணிகள்படத்தில் அனிகா சுரேந்திரன், வனிதா விஜயகுமார் மற்றும் சீதா ஆகியோர் நிறைமாத கர்ப்பிணியாக நடித்திருந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரல் ஆனது.

இந்த படத்தில் மருத்துவராக விஜய் டிவிபிரபலமானநீயா நானாநிகழ்ச்சி தொகுப்பாளர் கோபிநாத் நடித்துள்ளார்.

இந்த நிலையில், ‘வாசுவின் கர்ப்பிணிகள்படத்தில் வனிதாவின் கேரக்டர் குறித்த போஸ்டர் வெளியாகி வைரலாகி உள்ளது. இந்த படத்தில், நடிகை வனிதாபல்லவிஎன்ற கேரக்டரில் நடித்து வருகிறார். இந்த போஸ்டரில் அவர் கர்ப்பமாக இருப்பது போல போஸ் கொடுத்துள்ளார். நடிகை வனிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட இந்த திடீர் போட்டோ இன்ஸ்டாவில் வைரலாகி வருகிறது.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!