முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிராமி விருது பெற்ற பிரபல ஹாலிவுட் பாடகர் மறைவு

புதன்கிழமை, 10 ஆகஸ்ட் 2022      உலகம்
Lamont-Dozier 2022-08-10

Source: provided

நியூயார்க் : கிராமி விருது பெற்ற ஹாலிவுட் பாடகர்  லாமண்ட் டோசியர் உடல்நலக்குறைவால் காலமானார். 

அமெரிக்காவின் மத்திய மேற்கு மாநிலமான மிச்சிகனில் உள்ள மிகப் பெரிய நகரமான டெட்ராய்ட்டில் வசித்த பாடகரும், கவிஞருமான லாமண்ட் டோசியர் (81), உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவரது வீட்டில் காலமானார். இவரது மனைவி பார்பரா உல்மன் கடந்தாண்டு இறந்தார்.

அவரது மகன்களான பாடகர் பியூ டோசியர் மற்றும் இசையமைப்பாளர் பாரிஸ் ரே டோசியர் ஆகியோர் ஆவார். லாஸ் ஏஞ்சல்ஸில் கடந்த 2009-ல் நடந்த 51-வது ஆண்டு கிராமி விருதுகளை லாமண்ட் டோசியர் பெற்றார்.

ஸ்டாப். இன் தி நேம் ஆப் லவ், பேபி லவ், டூ ஹார்ட்ஸ் போன்ற படங்களின் வெற்றிப் பாடல்களை எழுதிய கவிஞர் மற்றும் பாடகரான லாமண்ட் டோசியரின் மறைவுக்கு, ஹாலிவுட் திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து