முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராகுலுக்கு உடல்நல குறைவு; ராஜஸ்தான் பயணம் ரத்து

புதன்கிழமை, 10 ஆகஸ்ட் 2022      இந்தியா
Rahul Gandhi  2021 11 03

Source: provided

புதுடெல்லி : காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உடல்நல குறைவால் ராஜஸ்தான் வருகையை நேற்று ரத்து செய்தார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ராஜஸ்தானின் ஆல்வார் நகருக்கு நேற்று வருகை தர திட்டமிட்டு இருந்தார். அவர் கட்சியின் நேத்ராத்வ சங்கல்ப சிவிர் கூட்டத்தில் கலந்து கொள்ள இருந்தார். 

இந்நிலையில், அவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டு உள்ளது. இதனால், தனது ராஜஸ்தான் வருகையை அவர் நேற்று ரத்து செய்ததாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. ராகுல் காந்தியின் சகோதரி மற்றும் கட்சி பொது செயலாளரான பிரியங்கா காந்திக்கு கொரோனா பாதிப்பு நேற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து