முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோர்பேவாக்ஸ் பூஸ்டர் தடுப்பூசி செலுத்த மத்திய அரசு ஒப்புதல்

புதன்கிழமை, 10 ஆகஸ்ட் 2022      இந்தியா
Corbevax 2022-08-10

Source: provided

புதுடெல்லி : நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கோர்பேவாக்ஸ் தடுப்பூசி செலுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்து உள்ளது.

நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்தும் நோக்கில் தடுப்பூசி போடும் பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக கோவிஷீல்டு அல்லது கோவேக்சின் ஆகிய இரு தடுப்பூசிகள் செலுத்தி கொள்ள அரசு அனுமதி அளித்து உள்ளது. இந்நிலையில், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தி கொள்ளவும் அரசு அறிவுறுத்தி உள்ளது.

கோவேக்சின் அல்லது கோவிஷீல்டு தடுப்பூசிகளை செலுத்தி கொண்டவர்கள், எந்த தடுப்பூசியை முதல் 2 டோஸ்களாக செலுத்தி கொண்டார்களோ, அதனையே பூஸ்டர் டோஸ் தடுப்பூசியாகவும் செலுத்தி கொள்கின்றனர்.

இந்நிலையில், ஐதராபாத்தில் உள்ள பயாலஜிக்கல்-இ நிறுவனம் கோர்பேவாக்ஸ் என்ற பெயரிலான தடுப்பூசியை உருவாக்கி தயாரித்து வருகின்றனர். கோவிஷீல்டு அல்லது கோவேக்சின் ஆகிய இரு தடுப்பூசிகளில் எந்த தடுப்பூசியை 2 டோஸ்கள் செலுத்தி இருந்தாலும், செலுத்தி 6 மாதங்கள் ஆனவர்கள், இந்த தடுப்பூசியை செலுத்தி கொள்ளலாம் என தடுப்பூசிக்கான தேசிய தொழில்நுட்ப அறிவுறுத்தலுக்கான கொரோனா பணிக்குழு, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது.

இதன்படி, 18 வயது பூர்த்தியடைந்த நபர்களுக்கு கோர்பேவாக்ஸ் பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதற்கான பரிந்துரையில் இருந்த தடுப்பூசிக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனால், கொரோனாவுக்கு எதிராக கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய இரு முதன்மை தடுப்பூசிகளில் எதனை முதலில் போட்டு கொண்டிருந்தாலும், அதற்கு பூஸ்டர் டோசாக கோர்பேவாக்ஸ் தடுப்பூசியை பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

இதுபற்றி பயாலஜிக்கல்-இ நிறுவனம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய இரு தடுப்பூசிகளில் ஏதேனும் ஒன்றை 2 டோஸ்களாக எடுத்து கொண்டவர்கள் பூஸ்டர் தடுப்பூசியாக பயன்படுத்தி கொள்ள அனுமதிக்கப்பட்ட நாட்டின் முதல் தடுப்பூசி என்ற பெருமையை கோர்பேவாக்ஸ் பெறுகிறது என தெரிவித்து உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து