முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கு: பள்ளி தாளாளர் உள்பட 5 பேருக்கு மேலும் 15 நாட்கள் காவல் நீட்டிப்பு

வெள்ளிக்கிழமை, 12 ஆகஸ்ட் 2022      தமிழகம்
Kallakurichi 2022 01 12

கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் பள்ளி தாளாளர் ரவிக்குமார் உள்ளிட்ட 5 பேருக்கு ஆகஸ்ட் 26ம் தேதி வரை காவல் நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்த கடலூர் மாவட்டம் பெரியநெசலூரை சேர்ந்த மாணவி, கடந்த மாதம் 13-ம் தேதியன்று மர்மமான முறையில் இறந்தார். மாணவியின் தாய் செல்வி அளித்த புகாரின்பேரில் சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 5 பேரை கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனர். 

பின்னர் இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணைக்கு மாற்றப்பட்டதையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பள்ளி தாளாளர் ரவிக்குமார் உள்ளிட்ட 5 பேரும் தங்களுக்கு ஜாமீன் கேட்டு தனித்தனியாக விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் கடந்த மாதம் 28-ந் தேதி மனுதாக்கல் செய்தனர்.இந்த வழக்கு விழுப்புரம் கோர்ட்டில் நடந்து வருகிறது.

இந்த நிலையில் பள்ளி தாளாளர் ரவிக்குமார் உள்ளிட்ட 5 பேரின் காவல் நேற்று முன்தினம் முடிவடைந்ததை அடுத்து, இந்த வழக்கு நேற்று விழுப்புரம் தலைமை குற்றவியல் கோர்ட்டில் உத்தரவுவிசாரணைக்கு வந்தது. காணொலி காட்சி வாயிலாக விசாரித்த நீதிபதி புஷ்பரணி, பள்ளி தாளாளர் ரவிக்குமார் உள்ளிட்ட 5 பேருக்கு மேலும் 15 நாட்கள் காவல் நீட்டித்து உத்தரவிட்டார். ஆகஸ்ட் 26ம் தேதி வரை காவல் நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து