முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: சகாப்வா தலைமையிலான ஜிம்பாப்வே அணி அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 12 ஆகஸ்ட் 2022      விளையாட்டு
Zimbabwe 2022-08-12

இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப் பயணம் செய்து மூன்று ஆட்டம் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் விளையாடுகிறது. இதற்கான ஜிம்பாப்வே அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அணிக்கு சகாப்வா கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார்.

ஹராரேவில் தொடக்கம்...

இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப் பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் விளையாடுகிறது. முதல் போட்டி வருகிற 18-ந்தேதி ஹராரேவில் நடக்கிறது. இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, பும்ரா, ரிஷப் பண்ட் உள்ளிட்ட முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளது. துணை கேப்டன் லோகேஷ் ராகுல் காயம் மற்றும் கொரோனா பாதிப்பால் அவதிப்பட்டதால் ஜிம்பாப்வே தொடரில் அவரது பெயர் பரிசீலிக்கப்படவில்லை. கேப்டனாக ஷிகர் தவான் அறிவிக்கப்பட்டு இருந்தார்.

லோகேஷ் ராகுல்... 

இதற்கிடையே லோகேஷ் ராகுல் குணமடைந்து முழு உடல் தகுதி பெற்றதால் ஜிம்பாப்வே தொடரில் கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஷிகர் தவான் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் விளையாடும் ஜிம்பாப்வே அணி அறிவிக்கப்பட்டு உள்ளது.

கேப்டன் கிரேக் எர்வின் காயம் காரணமாக இடம் பெறவில்லை. அவருக்கு பதில் கேப்டனாக ரெஜிஸ் சகாப்வா நியமிக்கப்பட்டுள்ளார். ஜிம்பாப்வே அணி வீரர்கள் விபரம் வருமாறு., ரெஜிஸ் சகாப்வா (கேப்டன்), சிக்கந்தர் ராசா, இன்னசென்ட் கையா, கைடானோ, வெஸ்சி மாதேவெரே, ரியான் பர்ல், தனகா ஷிவாண்டா, பிராட்லி எவன்ஸ், லூக் ஜாங்வே, கிளைவ் மாடண்டே, ஜான் மசோரா, முன்யோங்கா, ரிச்சர்ட் நகர்வா, ரிக்டர் நகராவா, நியுச்சி, மில்டன் ஷூம்பா, டிரிபாகோ.

மசகட்சா காயம்...

காயம் காரணமாக சுழற்பந்து வீச்சாளர் வெலிங்டன் மசகட்சா இடம்பெறவில்லை. சமீபத்தில் வங்காள தேசத்துக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரை 2-1 என்று ஜிம்பாப்வே கைப்பற்றியதால் நம்பிக்கையுடன் உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து