முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவில் விமானத்தை இயக்கி அசத்திய தாய், மகள் வலைதளங்களில் வீடியோ வைரல்

ஞாயிற்றுக்கிழமை, 14 ஆகஸ்ட் 2022      உலகம்
Holly-Keely 2022-08-14

Source: provided

வாஷிங்டன் ; அமெரிக்காவில் பைலட்டுகளாக பணிபுரியும் தாய், மகள் இருவரும் இணைந்து விமானம் ஓட்டி அசத்தி இருக்கிறார்கள். 

அமெரிக்காவின் சவுத் வெஸ்ட் ஏர்லைன்சில் தாயார் ஹோலி பெடிட், கேப்டன் அந்தஸ்தில் இருக்கிறார். மகள் கீலி பெட்டிட் முதல் நிலை அதிகாரியாக பணிபுரிகிறார். இருவரும் அமெரிக்காவின் கொலராடோ மாநிலத்திலுள்ள டென்வரில் இருந்து செயிண்ட் லூயிஸ் நகருக்கு விமானத்தை இயக்கி உள்ளனர்.

இரு நகரங்களுக்கு இடையே விமான பயண தூரம் சுமார் 2 மணி நேரம். இதன் மூலம் அமெரிக்காவில் விமானம் இயக்கிய முதல் தாய், மகள் என்ற பெருமையை பெற்றுள்ளார்கள். இருவரும் விமானம் ஓட்டும் புகைப்படங்களும், வீடியோவும் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வைரலாகி இருக்கிறது. 

'எங்களுக்கும், சவுத் வெஸ்ட் ஏர்லைன்சுக்கும் இது உற்சாகமான நாள். மிகவும் சிறப்பான நாளும் கூட. சவுத் ஏர்லைன்ஸ் விமானத்தை இயக்கும் முதல் தாய்-மகள் நாங்கள்தான் என்பது பெருமிதமாக இருக்கிறது. என் கனவும் நனவாகி உள்ளது. நான் இந்த தொழிலை காதலிக்கிறேன். என் பிள்ளைகளில் ஒருவர், என்னை பின்பற்றி இந்த தொழிலில் இணைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நாங்கள் இருவரும் இணைந்து விமானம் ஓட்டியது வரலாற்று நிகழ்வாக பதிவாகி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று ஹோலி தெரிவித்துள்ளார். 

தாயாரை பார்த்து கீலிக்கும் விமானம் ஓட்டும் ஆசை பிறந்திருக்கிறது. தனது 14 வயதில் விமானி ஆக வேண்டும் என்று கனவு காண தொடங்கி இருக்கிறார். கடந்த 2017-ம் ஆண்டு பைலட் உரிமம் பெற்று விமான நிறுவனத்தில் பயிற்சியாளராக பணியாற்றத் தொடங்கினார். 2018-ம் ஆண்டு விமானியாக பணியமர்த்தப்பட்டிருக்கிறார். இருப்பினும் இப்போதுதான் தாய், மகள் இருவரும் ஒன்றாக இணைந்து விமானம் ஓட்டி இருக்கிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து