முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரானில் முதன்முறையாக ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் தொற்று உறுதி

புதன்கிழமை, 17 ஆகஸ்ட் 2022      உலகம்
Monkey-Measles 2022 07 29

Source: provided

டெக்ரான் : ஈரானில் முதல் முறையாக பெண் ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது. 

கடந்த 2 ஆண்டுகளாக உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த கொரோனா தொற்று, தற்போது கட்டுக்குள் வந்துள்ளது. இந்நிலையில், ஆப்பிரிக்காவில் புதிதாக உருவான குரங்கு அம்மை நோய், தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதன் காரணமாக பல நாடுகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

இங்கிலாந்து, ஸ்பெயின், போர்ச்சுகல், கனடா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் குரங்கு அம்மை பாதித்துள்ளது என உலக சுகாதார அமைப்பு அறிவித்திருந்தது. இந்நிலையில், ஈரான் நாட்டில் முதல் முறையாக ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது என அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

34 வயது பெண் ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு கண்டறியப்பட்டதும், அவர் தனிமையில் சிகிச்சை பெற்று வருகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து