முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செஸ் போட்டி: முதல் சுற்றில் தமிழக வீரர் குகேஷ் வெற்றி

புதன்கிழமை, 17 ஆகஸ்ட் 2022      விளையாட்டு
Gukesh 2022-08-17

Source: provided

சென்னை : டர்கிஷ் செஸ் சூப்பர் லீக் போட்டியில் விளையாடி வரும் குகேஷ் முதல் சுற்றில் வெற்றியடைந்துள்ளார்.

குகேஷ், நிஹல் சரின்... 

சென்னை மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்றது. ஓபன் பிரிவில் அதிபன், குகேஷ், பிரக்ஞானந்தா, நிஹல் சரின், ருணாக் சத்வனி இடம்பெற்ற இந்திய பி அணி வெண்கலம் வென்றது. விளையாட்டு வீரர்களின் வெற்றி, ரேட்டிங் அடிப்படையில் வழங்கப்படும் தனிநபர் பதக்கங்களில் இந்திய இளம் வீரர்கள் டி குகேஷ், நிஹல் சரின் ஆகியோர் தங்கம் வென்றனர். 

11 ஆட்டங்களில்... 

சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டியில் விளையாடிய 11 ஆட்டங்களில் 8-ல் வெற்றி பெற்ற குகேஷ், இரு ஆட்டங்களை டிரா செய்து ஓர் ஆட்டத்தில் மட்டும் தோல்வியடைந்தார்.  செஸ் ஒலிம்பியாட் போட்டிக்குப் பிறகு குகேஷ் கலந்துகொள்ளும் போட்டிகள் மீது ரசிகர்களுக்கு ஆர்வம் ஏற்பட்டுள்ளது. சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டிக்குப் பிறகு டர்கிஷ் செஸ் சூப்பர் லீக் சர்வதேசப் போட்டியில் பங்கேற்றுள்ளார் குகேஷ்.

கிளாசிகல் முறையில்... 

இந்நிலையில் டர்கிஷ் செஸ் சூப்பர் லீக் போட்டியில் முதல் சுற்றில் ஈரானைச் சேர்ந்த கிராண்ட்மாஸ்டர் ஆர்யன் கோலமியை எதிர்கொண்டார் குகேஷ். கிளாசிகல் முறையில் நடைபெற்ற ஆட்டத்தில் வெள்ளை நிறக் காய்களுடன் விளையாடிய குகேஷ் 51-வது நகர்த்தலின் முடிவில் வெற்றியடைந்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

சர்க்கரை நோயினால் ஏற்படும் எரிச்சல், பாத எரிச்சல் - கை கால் எரிச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் கட்டிகள் கரைய, குணமாக, அடிபட்ட வீக்கம், காயங்களுக்கு, நரம்பு சிலந்தி, சிலந்தி புண், வீக்கம் ஆற சித்த மருத்துவ குறிப்புக்கள் மஞ்சள் காமாலை குணமாக | கல்லிரல் குறைபாடு நீங்க | இரத்தம் தூய்மையாக | பாண்டு தீர - சித்த மருத்துவ குறிப்புக்கள்
பித்த நோய்கள் குணமாக | பித்த மயக்கம் தீர | பித்த நீர் மலத்துடன் வெளியேற | உடல் உஷ்ணத்தை தணிக்க | கல்லடைப்பு முகப்பரு குணமாக | தழும்புகள், கரும்புள்ளி, பாலுண்ணி நீங்க | மருவு கரப்பான் பிளவை தீர சித்த மருத்துவ குறிப்புக்கள் மூட்டு வலி குணமாக | Natural Home Remedy for Knee & Hip Joint Pain | Arthritis
View all comments

வாசகர் கருத்து