முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாயை மூடிக்கொண்டு இருந்தால் நல்லது : தென்கொரிய அதிபர் மீது கிம் சகோதரி விமர்சனம்

வெள்ளிக்கிழமை, 19 ஆகஸ்ட் 2022      உலகம்
Kim-Jo-Jong 2022-08-19

Source: provided

சியோல் : தென்கொரிய அதிபர் வாயை மூடிக்கொண்டு இருந்தால் நல்லது என வடகொரிய அதிபர் கிம்மின் சகோதரி கடுமையாக விமர்சித்துள்ளார். 

தென்கொரிய அதிபர் யோன் சுக்-இயொல் கடந்த புதன்கிழமை செய்தியாளர்களை சந்தித்த போது, வடகொரியா அணு ஆயுதத்தை கைவிட்டால் அந்நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த உதவ தென்கொரியா தயாராக உள்ளதாக தெரிவித்தார். இந்நிலையில், தென்கொரிய அதிபரின் கோரிக்கையை வடகொரியா நிராகரித்தது. 

இது தொடர்பாக வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் சகோதரி கிம் ஜோ ஜாங் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கிம் ஜோ, அவர் வாயை மூடிக்கொண்டு இருந்தால் அவரது மதிப்பிற்கு நல்லது என்றும், பொருளாதார ஒத்துழைப்பிற்காக வடகொரியாவின் மரியாதை மற்றும் அணு ஆயுதங்களை வர்த்தகம் செய்ய முடியும் என்று அவர் நினைப்பது மிகவும் எளிமையானது மற்றும் சிறுபிள்ளைத்தனமானது என்றும் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து