முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கன்னிமாத பூஜை: சபரிமலை நடை இன்று மாலை திறப்பு: பக்தர்களுக்கான கட்டுப்பாடுகள் நீக்கம்

வியாழக்கிழமை, 15 செப்டம்பர் 2022      ஆன்மிகம்
Sabarimala 2022 09 09

கன்னிமாத பூஜைக்காக சபரிமலை நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. கோவிலுக்கு வருவது தொடர்பாக பக்தர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை முழுமையாக விலக்கி கொள்வது என்று முடிவு செய்யப்பட்டு உள்ளது.

கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு திருவிழாக்களில் லட்சக்கணக்கில் பக்தர்கள் பங்கேற்பார்கள். கொரோனா பிரச்சினை ஏற்பட்டதை தொடர்ந்து சபரிமலை செல்ல பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மேலும் தரிசனத்திற்கு செல்லும் முன்பு பரிசோதனை சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு கெடுபிடிகளும் இருந்து வந்தன.

இந்த நிலையில், மலையாள மாதமான கன்னிமாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. கோவில் தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி திறந்து வைக்கிறார். இன்று முதல் 21-ந் தேதி வரை பூஜைகள் 5 நாட்கள் நடைபெறும்.

இதற்கிடையே கொரோனா பிரச்சினை குறைந்து வருவதால் அதற்காக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளும் தற்போது தளர்த்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் அடுத்து வர இருக்கின்ற மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு சீசன் காலங்களில் கோவிலுக்குள் பக்தர்களை அனுமதிப்பது தொடர்பாக திருவிதாங்கூர் தேவஸ்தான நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் கோவிலுக்கு வருவது தொடர்பாக பக்தர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை முழுமையாக விலக்கி கொள்வது என்று முடிவு செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பான அறிக்கையை தேவஸ்தான அதிகாரிகள் முதல்வர் பினராயி விஜயனுக்கு அனுப்பி ஒப்புதல் பெற நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். விரைவில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் எனக்கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து